வாய்ப்பில்லை போல.. மக்கள் வாழும் சூழலை இழந்த இலங்கை.. மொத்தமாய் மூடுவிழா நடத்திய ராஜபக்ஷே & கோ ?
கொழும்பு : இலங்கையில் கோத்தபய ராஜபக்சேவின் தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் இலங்கை கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. வரலாற்றில் இல்லாத அளவுக்கு அங்கு உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இலங்கை அரசு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
நாட்டின் வரி வசூலும் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், மக்கள் அன்றாட தேவைக்குக் கூட பணமிருந்தும் உணவுப் பொருட்களுக்கு அல்லாடும் நிலை உருவாகியுள்ளதோடு, அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன.

கடும் பொருளாதார சரிவு
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தவறான பொருளாதார கொள்கை முடிவு களால் இலங்கை கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. வரலாற்றில் இல்லாத அளவுக்கு அங்கு உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 2,000 அதிகரித்து 4,199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.104 ஆக இருந்த டீசலின் விலை ரூ.176-ஆக அதிகரித்துள்ளது.

கடும் விலை உயர்வு
இலங்கையில் பால் உற்பத்தி மிகவும் குறைவாகும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை இலங்கை அரசு அண்மையில் அதிகரித்தது. இதன்படி, ஒரு கிலோ பால் மாவு பாக்கெட் ஒன்றின் புதிய விலை ரூ.1,945 ஆகவும், 400 கிராம் பால் மாவு பாக்கெட் ஒன்றின் புதிய விலை ரூ.790 ஆகவும் உயர்ந்துள்ளது. பால் மாவு விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடக்கிறது. இதன் காரணமாக உணவகங்களில் பால், தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரித்துள்ளது.

விண்ணை முட்டும் விலைவாசி
எரிபொருள், பால், மாவு விலை அதிகரித்துள்ள நிலையில், ரூ.100-க்கு குறைவாக பால், தேநீரை விற்பனை செய்ய முடியாது என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் கூறுகிறது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.400 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஏழை மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்றான பாணின் (பிரெட்) விலை ஒரு நாத்தலுக்கு ரூ.130 ஆக அதிகரித்துள்ளது. ரூ.109 ஆக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.425 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மஞ்சளின் விலை ரூ.5,000, ஒரு கிலோ சீரகம் ரூ.8,000, பெருஞ்சீரகம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திவாலாகும் இலங்கை
இலங்கையின் மொத்த பொருளாதாரமும் விழுந்து நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் முழு காரணம் சீனாவிடம் கடன் வாங்கியது உள்ளிட்ட கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை அரசின் முக்கிய நிர்வாகிகள் எடுத்த தவறான முடிவுதான் காரணம் எனவும் கூறுகின்றனர். கையில் பணமிருந்தும் ஒரு வேளை உணவுக்குக் கூட கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறும் இலங்கை மக்கள் இன்னொரு சோமாலியாவாக இலங்கை மாறும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications