இலங்கை அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார் கோத்தபாய.. உறுதி செய்தது பிரதமர் அலுவலகம்!
கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து ஜூலை 13ம் தேதி கோத்தபய ராஜபக்சே விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நீட்டித்து வந்த அரசியல் குழப்பம் இப்போது கையை மீறிச் சென்றுள்ளது. மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டு இருக்கிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு ஏற்கனவே மருந்து, உணவுப் பொருட்கள் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் இக்கட்டான சூழலில் உள்ளனர்.

இதற்கு காரணம் ஆளும் ராஜபக்ச தரப்பு தான் காரணம் என்று இலங்கை மக்கள் போராட வீதிக்கு வந்தனர். சிறு அளவில் தொடங்கிய மக்கள் போராட்டம் வீரியம் மிக்கதாக மாறியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் போராட்டம் கையை மீறிச் சென்ற நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு பயந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அப்போதே அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து மக்கள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 9ம் தேதி அதிபர் மாளிகை மக்களால் முற்றுகையிடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடினார். இதனைத்தொடர்ந்து அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றினர்.
இருந்தும் மக்களின் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், வரும் புதன் கிழமை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கேவிடம் உறுதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னர் கூறியபடி வரும் ஜூ 13ம் தேதி அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications