அடேங்கப்பா! இலங்கையில் உச்சம் தொட்டது பெட்ரோல்- டீசல் விலை.. ஒரே நாளில் ரூ.75 வரை உயர்வு
கொழும்பு: அண்டை நாடான இலங்கையில் ஒரே நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாயும் டீசல் விலை 55 ரூபாயும் (இலங்கை ரூபாய்) உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து இலங்கையும் தப்பவில்லை.
இலங்கை நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பியுள்ளது. கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறையாகச் சுற்றுலாத் துறை உள்ளதால் இலங்கை பொருளாதாரமும் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இலங்கை பொருளாதாரம்
இந்த ஆண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவீதம் என்ற அளவுக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது. மேலும், அந்நியச் செலாவணி குறைந்துள்ளதால், இலங்கை ரூபாயின் மதிப்பும் கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 256 இலங்கை ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால். சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

தட்டுப்பாடு
அதேபோல இலங்கையில் கடந்த ஒரு மாதமாகவே மின்சாரம், எரிபொருள் தட்டுப்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் செய்வதில் அந்நாட்டு கடும் சவாலைச் சந்தித்துள்ளது. இதனால் இலங்கை முழுக்க பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

லங்கா ஐஓசி
இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இலங்கை துணை நிறுவனமான லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து இலங்கை பெட்ரோல், டீசலை வாங்குகிறது. உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று லங்கா ஐஓசி நிறுவனம் பெட்ரோல் விலையை மற்றும் டீசல் விலையை முறையே 50 ரூபாய் மற்றும் 75 ரூயாய் உயத்தியது.

ஒரே நாளில் உயர்வு
இதையடுத்து இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியமும் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 77 ரூபாயும் டீசல் விலை 55 ரூபாயும் (இலங்கை ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியமம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இலங்கை நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207 இலங்கை ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications