விக்கித்து போன கோத்தபய ராஜபக்சே.. உங்க ஆட்சியில் இடம்பெற மாட்டோம்! அறிவித்த இலங்கை எதிர்க்கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் ஆளும் கட்சியின் அதிகார பகிர்வில் இடம்பெற விரும்பவில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.

Recommended Video

    Rajapaksa-களை வெறுக்கும் SriLanka..ஓயாத மக்கள் போராட்டம் | Oneindia Tamil

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதையடுத்து மக்கள் அங்கு சாலைகளில் இறங்கி கடந்த 2 மாதமாக கடுமையாக போராடி வருகின்றனர்.

    இதையடுத்து நேற்று முதல்நாள் இரவு இலங்கை அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா செய்தது. பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர எல்லோரும் ராஜினாமா செய்தனர்.

    அமைச்சரவை

    அமைச்சரவை

    அங்கு ராஜபக்சே குடும்பத்தினரை மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதையடுத்து ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட எல்லோரும் ராஜினாமா செய்தனர். அதோடு எதிர்கட்சிகளை கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தனர். எல்லா எதிர்க்கட்சிகளும் எங்களுடன் இணையும், சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று பிரதமர், அதிபர் அழைப்பு விடுத்தனர். மேலும் இடைக்கால அமைச்சரவையும் இதற்காக உருவாக்கப்பட்டது.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    இந்த நிலையில் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அழைப்பை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளது., அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஆளும் கூட்டணியோடு எங்களால் சேர்ந்து ஆட்சி செய்ய முடியும். அவர்களின் கூட்டணியில் இணைய நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் ஊழல் செய்தவர்கள் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

    ஊழல்

    ஊழல்

    ஊழல் செய்தவர்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியாது. ராஜபக்சே குடும்பம் மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் நீடிக்க கூடாது. அதேபோல் மகிந்த ராஜபக்சே பிரதமராக நீடிக்க கூடாது. இதனால் நாங்கள் அவர்களின் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது. இது கோத்தபய ராஜபக்சே தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    முடியாது

    முடியாது

    அங்கு உள்ள 225 எம்பிக்களில் மொத்தம் 54 எம்பிக்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மற்ற பிரதான எதிர்க்கட்சிகளும் ஆளும் தரப்பின் இந்த கோரிக்கையை ஏற்காது என்று கூறப்படுகிறது. அங்கு 18 கட்சிகள் இணைந்து ஶ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பு என்ற கூட்டணியை அமைத்து உள்ளன. ஆனால் இதில் இருந்து தற்போது பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் வெளியேறி நாடாளுமன்றத்தில் தனியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+