கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு... இலங்கை அரசு உறுதி செய்தது

Google Oneindia Tamil News

கொழும்பு: ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

கடந்த மாதம் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Sri Lankan government has assured foreign involvement in the blast

இந்த குண்டு வெடிப்பை ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் நடத்தியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு சிகரகத்தை விட அதிக எரிசக்தி கொண்டது. எனவே இந்த வெடிகுண்டுகளை தயாரிக்க நிறைய ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு இருப்பதால் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

நாளை வன்முறைக்கு வாய்ப்பு.. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை நாளை வன்முறைக்கு வாய்ப்பு.. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

முன்னதாக, தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ‌ஷக்ரான் காசிம் தற்கொலைத் தாக்குதலில் பலியானது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம், இலங்கையில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Sri Lankan Government has confirmed that Foreign involvement in serial blasts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X