மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்-120 பேர் ஆதரவு- பதவி விலக ஒரு வாரம் கெடு
கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலக வலியுறுத்தும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மொத்தம் 120 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ஒரு வாரத்தில் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி அந்நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை சமாளிக்க முடியாத ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தொடருகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 17 நாட்களாக போராட்டம் தொடருகிறது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம், வீடு ஆகியவற்றை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்துகின்றனர்.

இதனிடையே மகிந்த ராஜபக்சே பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சேவோ, இடைக்கால அரசு அமைந்தாலும் தாமே பிரதமர் என பிடிவாதம் பிடிக்கிறார். அதேநேரத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி கோத்தபாய ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மகிந்த எதிர்ப்பு அணி எம்.பி. உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். இத்தீர்மானத்துக்கு இப்போதே 120 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் மகிந்த ராஜபக்சே ஒரு வாரத்தில் பதவி விலக வேண்டும் என்றார். இன்னொருபுறம் அப்படி ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என இன்னமும் முடிவெடுக்கவில்லை என்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications