பிரபாகரன் கொலை.. எனக்கு அப்போது எதுவுமே தெரியாது! அந்தர் பல்டியடித்த இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா
கொழும்பு: விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணமடைண்ட்க செய்தி தனக்கு தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் மைதிரிபால சிறிசேனா தெரிவித்து இருக்கிறார்.
இலங்கை யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இலங்கை போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் 2 மாதங்கள் நான் தற்காலிகமாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தேன். பிரபாகரனுக்கு அப்போது மரபணு சோதனை நடைபெற்றது குறித்து எனக்கு எந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

பிரபாகரன் மரணமடைந்தது தொடர்பாகவும் எந்த தகவலுக்கு எனக்கு தெரிவிக்கப்படவில்லை." என்று அவர் கூறினார். இலங்கையின் அதிபராக மைதிரிபால சிறிசேனா பதவியில் இருந்தபோது, "நானே போரை முன்னின்று நடத்தினேன். பிரபாகரனை வீழ்த்தியதில் எனக்கு முக்கிய பங்கு உல்ளது." என பேசி இருந்த நிலையில் தற்போது அதற்காக மாற்றமான கருத்தை அவர் பதிவு செய்து இருக்கிறார்.
இலங்கையில் பெருமளவில் வசித்து வரும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தனி ஈழம் கேட்டு போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு ஈழத் தமிழ் அமைப்புகள் இந்த போராட்டத்தை கையில் எடுத்தன. அதில் முக்கிய பங்கு வகித்தது பிரபாகரனின் விடுதலை புலிகள் அமைப்பாகும். கடந்த 1983 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையே தொடங்கிய போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டது. பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகம் என்று ஐ.நா. தெரிவித்து உள்ளது.
இலங்கை ராணுவம் ஏராளமான போர் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் வசித்து வந்த பகுதிகளை நோக்கி குண்டுகளை தூக்கி எரிந்து அப்பாவி தமிழர்களை படுகொலை செய்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டப்பட்டன. இந்த இறுதிப்போரில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், மூத்த தலைவர்கள் என பலர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். அப்போது மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராக பதவி வகித்து வந்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications