சிறிசேனா ஆட்டம் நிற்கவில்லை.. இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம்.. சம்பந்தன் பதவி பறிப்பு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்துள்ளார் அந்த நாட்டு அதிபர் சிறிசேனா. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வாக்களித்தது. அடுத்தடுத்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் ராஜபக்சே அரசு தோற்றது.

வேறுவழியில்லாமல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ஷ. இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் ரணில் விக்கிரமசிங்க பக்கம் நியாயம் இருப்பதாக தீர்ப்பளித்தது. எனவே, மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பழிவாங்கும் நடவடிக்கைபோல, சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இதனை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஏற்றுக்கொண்டுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ராஜபக்ஷவுக்கு ஆதரவு கேட்டு அவருக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்த நிலையில் இனவெறி நடவடிக்கையாக சம்பந்தனை பதவியை விட்டு சிறிசேனா நீக்கி இருக்கக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான சுமந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். சிறிசேனாவின் ஆட்டம் முடியவில்லை என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications