ஒற்றை எம்.பி.யாக இருந்து பிரதமர் பதவியில் அமர்ந்த ரணில்.. முதல் ஃபாரீன் டூரே இந்தியா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு நியமன எம்.பி.யான ரணில் விக்கிரமசிங்கேவை அந்நாட்டின் புதிய பிரதமராக்கி உள்ளார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே. இலங்கையின் பிரதமரான உடனே ரணில் விக்கிரமசிங்கே தமது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகை தர திட்டமிட்டுள்ளார்.

சஜித்துக்கு பதவி மறுப்பு

சஜித்துக்கு பதவி மறுப்பு


இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்து மக்கள் கிளர்ச்சியி ஈடுபட்டனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசதான் பிரதமராக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜினாமா செய்ய வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். இதனால் அவருக்கு பிரதமர் பதவி மறுக்கப்பட்டது.

பிரதமராக ரணில்

பிரதமராக ரணில்


இதையடுத்து இலங்கையில் பல முறை குறுகிய கால பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை புதிய பிரதமராக்கினார் கோத்தபாய ராஜபக்சே. 2002 இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. அக்கட்சியின் நியமன எம்.பி.யாகவே ரணில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு எம்.பி.தான் ரணில். அப்படியான நிலையில் ரணிலை கோத்தபாய பிரதமராக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒத்துழையாமை போராட்டத்தை அறிவித்து வருகின்றன.

சர்வதேச நாடுகளும் ரணிலும்

சர்வதேச நாடுகளும் ரணிலும்

இன்னொரு பக்கம்,சர்வதேச சமூகத்திடம் நன்மதிப்பை பெற்றவர் ரணில் விக்கிரமசிங்கே. அதாவது இலங்கையில் சர்வதேச சமூகம் என்ன செய்ய நினைக்கிறதோ அதை ரணில் கச்சிதமாக செய்து கொடுப்பார் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. அதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரணில் நியமனத்தை உடனடியாக வரவேற்றுள்ளன. இலங்கைக்கான இந்தியாவின் தூதர், ரணில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்தும் பேசினார்.

இந்தியா வருகை?

இந்தியா வருகை?

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே, தமது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில் இந்தியா கடனுதவி உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய வருகை மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாகவும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+