இலங்கையில் சிலிண்டர் தட்டுப்பாடு.. அரசு பணம் செலுத்தாததால் நங்கூரமிட்டு நிற்கும் எரிவாயு கப்பல்கள்
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில் சிலிண்டரில் எரிவாயுவை நிரப்ப ஏராளமான மக்கள் வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து வந்துள்ளது. இதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்கள், முதல் சமையல் எரிவாயு வரை அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அவ்வாறு பொருட்கள் சந்தையில் இருந்தாலும் அதன் விலைகள் அதிகரித்துள்ளன.

இலங்கையில் பஞ்சம்
1970 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் பஞ்சம் நிலவியது. ஆனால் அந்த காலகட்டத்தை காட்டிலும் தற்போது மக்கள் கடுமையான பஞ்சத்தை சந்தித்து வருகிறார்கள். சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் இலங்கையில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

விறகு அடுப்புகள்
விறகு அடுப்புகளின் மூலம் சமையலை முன்னெடுக்கும் உணவகங்கள் மட்டுமே திறந்திருக்கின்றன. எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ள சில உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விநியோகத்தை லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் இடைநிறுத்தியுள்ள நிலையில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

சிலிண்டர் தட்டுப்பாடு
இலங்கைக்கு சிலிண்டர் கொண்டு வரும் நிறுவனத்திற்கு அரசு பணம் செலுத்தாததால் எரிவாயு ஏற்றி வந்த கப்பல்கள் கடல் பரப்பில் நங்கூரமிட்டு நிற்கின்றன. ஆனால் எரிவாயுவுக்கான பணத்தை செலுத்திவிட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. எனினும் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிலிண்டர்களுடன் காத்திருக்கும் நிலை உள்ளது.

விலையுயர்வு
சம்பா அரிசியின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 115 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ 190- 210 வரை விற்பனையாகிறது. சிவப்பு அரிசியின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 93 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ 175- 200 வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 179 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ 200- 250 வரை விற்பனையாகிறது. முட்டையின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14.50 - 18.50 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ 30- 35 வரை விற்பனையாகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications