இலங்கை: உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய எதிர்ப்பு: கொழும்பில் பெரும் போராட்டம்- போலீசார் தாக்குதல்!
இலங்கை தலைநகரில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.
கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அரசு ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று பிரம்மான்டமான போராட்டம் நடத்தினர்.
இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்தை எதிர்கொண்டது. இதனால் இலங்கையில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இலங்கை தலைநகர் கொழும்பு போர்க்களமாக மாறியது. பொதுமக்கள் அங்கேயே உண்டு உறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனால் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு உயிருக்கு அஞ்சி வெளிநாடு தப்பிச் சென்றார். பின்னர் இலங்கை திரும்பினார். ஆனாலும் மக்கள் ஆவேசம் அடங்காத நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவும் இலங்கையை விட்டு தப்பி ஓடினார். வெளிநாடுகளில் அகதியாய் அலைந்த பின்னர் அடைக்கலம் கிடைக்காத விரக்தியி இலங்கை திரும்பினார். இதனையடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியா ரணில் விக்கிரமசிங்கே, பிரதமராக தினேஷ் குணவர்த்தன தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்னமும் இலங்கையின் பொருளாதார சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனடிப்படையில் இலங்கை உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து 13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தது. இன்னொரு பக்கம் போதுமான நிதி இல்லாததால் தேர்தல் பணிகளை ரணில் அரசு நிறுத்தியது. இதனால் இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்படும் நிலைமை உருவானது.
ரணில் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று தலைநகர் கொழும்பில் பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களால் இலங்கை தலைநகர் கொழும்பில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications