கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரொம்ப கவனமா இருங்க.. ஜாக்கிரதை.. இலங்கையை "க்ளோசாக" கவனிக்கும் சீனா.. பறந்து வந்த வார்னிங்!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நடக்கும் விவகாரங்களை தீவிரமாக கவனித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நடக்கும் மோதல்கள், கலவரங்கள், போராட்டங்கள் அனைத்திற்கும் சீனாவும் ஒரு காரணம் ஆகும். இலங்கை சீனாவிடம் வாங்கிய கடன் அண்ட் நாட்டின் பொருளாதார சரிவிற்கு முக்கிய காரணம் ஆகும்.

ஆனால் அது மட்டுமே காரணம் என்றும் கூறி விட முடியாது. சீனாவிடம் இலங்கை வாங்கிய மொத்த கடன் 8 பில்லியன் டாலர்.

இலங்கையில் இளைஞர்களின் புதிய அரசு.. ராஜபக்‌ஷேக்களுக்கு இடமில்லை; குறையும் அதிபர் அதிகாரம் -கோட்டாபய இலங்கையில் இளைஞர்களின் புதிய அரசு.. ராஜபக்‌ஷேக்களுக்கு இடமில்லை; குறையும் அதிபர் அதிகாரம் -கோட்டாபய

கடன் எவ்வளவு?

கடன் எவ்வளவு?

இவ்வளவு கடன் வாங்கி இலங்கையின் மொத்த கடனே 45 பில்லியன்தான். இதில் ஆறில் ஒரு பங்கு சீனாவிடம் வாங்கப்பட்ட கடன். இதெல்லாம் டாலரில் வாங்கப்பட்ட கடன். இதனால் டாலரில் இலங்கை வட்டியை செலுத்தி வந்தது. இதில் டாலராக மட்டும் 6 பில்லியன் டாலரை சீனாவிற்கு இலங்கை கொடுக்க வேண்டும். அதோடு தங்க நகை பத்திரமாக 1 பில்லியன் டாலரை கொடுக்க வேண்டும்.

கால அவகாசம்

கால அவகாசம்

இந்த கடன் கால அவகாசம் வரும் ஜூலை மாதத்தோடு முடிகிறது. அதற்குள் இந்த தங்க நகை பத்திரத்தின் கடனை சீனாவிடம் இலங்கை அடைக்க வேண்டும். இந்த கடனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று சீனா கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது. இந்த நிலையில்தான் இலங்கையில் இன்னும் நிலைமை மோசமாகி அங்கு போராட்டம், கலவரம் எல்லாம் நடந்து வருகிறது.

இலங்கை சீனா கடன்

இலங்கை சீனா கடன்

இதை பயன்படுத்தி இலங்கையில் தனக்கு ஆதரவான அரசை சீனா அமைக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது அரசியல் நிலையற்ற தன்மையை பயன்படுத்தி இலங்கையில் தனக்கு ஆதரவாக இருக்கும் நபரை வைத்து நிழல் அரசை அமைக்க சீனா முயற்சி செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இலங்கையில் நடக்கும் விவகாரங்களை மிகவும் க்ளோசாக வாட்ச் செய்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

என்ன சொன்னார்கள்?

என்ன சொன்னார்கள்?

இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் மிகவும் கவனமாக கவனித்து செய்து வருகிறோம் . இலங்கையில் இருக்கும் சீனர்களை கவனமாக இருக்கும்படி சொல்லி இருக்கிறோம். உங்களை ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறோம் என்று சீனா கூறியுள்ளது.

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்

சீனா இப்படி கவனமாக இலங்கை விவகாரங்களை கவனித்து வருகிறோம் என்று கூறி உள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் ஏதாவது வேலையை காட்ட சீனா முயற்சி செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது பற்றி கருத்து கூற சீனா மறுத்துவிட்டது. இலங்கையில் சீனாவின் முதலீடுகளை திறந்துவிட்டது மகிந்த ராஜபக்சேதான். இது சீனாவிற்கு ஒரு வகையில் பின்னடைவுதான்.

Recommended Video

    Politics பேசுவோம் | Hero-வாக பார்க்கப்பட்ட Mahinda Rajapaksa வீழ்ந்தது எப்படி?
    வாட்ச் செய்கிறோம்

    வாட்ச் செய்கிறோம்

    இந்தியா, அமெரிக்காவை கண்டுகொள்ளாமல் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் மகிந்த ராஜபக்சே. ஆனால் இப்போது அவர் பதவி விலகியது சீனாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. புதிதாக வரும் பிரதமர் சீனாவுடன் இதே போல் நெருக்கம் காட்ட வேண்டும். ஆனால் சீனாவிடம் கடன் வாங்கி அடிபட்டுவிட்டதால் புதிய பிரதமர் சீனாவிடம் நெருக்கம் காட்ட வாய்ப்பு குறைவு. இதனால் இலங்கையை எப்படியாவது கட்டுப்பாட்டில் வைக்க சீனா முயற்சிகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Why is China says it closely watching the Sri Lanka developments? இலங்கையில் நடக்கும் விவகாரங்களை தீவிரமாக கவனித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X