கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளியே நடமாட முடியாது.. செக் வைத்த சிங்களர்கள்.. கோத்தபயவிற்கு இவ்வளவு பெரிய சிக்கலா.. போச்சே!

Google Oneindia Tamil News

கொழும்பு: கொழும்பில் இன்று அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார சரிவை சரி செய்ய தவறிய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

முக்கியமாக ராஜபக்சே குடும்பத்தை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அங்கு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 தந்தை ராஜபக்சே சிலையை உடைத்து வீதியில் வீசிய சிங்களர்- கண்டதும் சுட்டுக் கொல்ல கோத்தபாய உத்தரவு தந்தை ராஜபக்சே சிலையை உடைத்து வீதியில் வீசிய சிங்களர்- கண்டதும் சுட்டுக் கொல்ல கோத்தபாய உத்தரவு

போராட்டம்

போராட்டம்

அங்கு அதிபர் அலுவலகத்திரு வெளியே galle கடற்கரை பகுதியில் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் நடக்கும் பகுதிக்கு கோ கோட்ட கமா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டங்கள் கடந்த இரண்டு மாதமாக தீவிரமாக நடந்த நிலையில், அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவருக்கு எதிராக கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் மட்டும் அவர் ராஜினாமா செய்யவில்லை. அவருக்கான எம்பிக்கள் ஆதரவு குறைந்துவிட்டது.

இலங்கை பொதுஜன முன்னணி

இலங்கை பொதுஜன முன்னணி

இலங்கை பொதுஜன முன்னணிக்கு ஆளும் கட்சி கூட்டணி எம்பிக்கள் பலர் ஆதரவு தரவில்லை. இதனால் அவரின் ஆட்சிக்கு பெரும்பான்மை போனது. ஆனாலும் எதிர்கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. அதிபராக கோத்தபய ராஜபக்சே இருக்கும் போது வேறு கட்சியை சேர்ந்தவர் பிரதமர் ஆனால்.. எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. அதிபரும் பதவி விலகினால் மட்டுமே நாங்கள் ஆட்சி அமைப்போம். பிரதமரை தேர்வு செய்வோம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

அதிபர்

அதிபர்

ஆனால் அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. நாம் இந்த பொருளாதார சரிவை கடப்போம். நமக்கு பிரச்சனை வராது. நான் இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்டு கொண்டு வருவேன் என்று கோத்தபய ராஜபக்சே கூறி வருகிறார். மகிந்த கூட தான் பதவி விலக போவதற்கான அறிகுறிகளை அவ்வப்போது பேச்சில் வெளிக்காட்டினார். ஆனால் கோத்தபய ராஜபக்சே பதவி விலக போவதற்கான அறிகுறிகள் எதையும் தனது பேச்சில் வெளிக்காட்டவில்லை.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகவில்லை என்றால்.. அவரை பதவி நீக்கம் செய்வது மட்டுமே ஒரே வழியாக இருக்கும். நாடாளுமன்றத்தில் இதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் 1ல் மூன்று பங்கு எம்பிக்கள் அதிபருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஏற்கனவே 50% சதவிகிதத்திற்கும் அதிகமான எம்பிக்கள் ஆளும் அதிபர் தரப்பிற்கு எதிராக உள்ளனர். இன்னும் 20-25 சதவிகித எம்பிக்கள் ஆளும் தரப்பிற்கு எதிராக திரும்ப வேண்டும்.

225 எம்பிக்கள்

225 எம்பிக்கள்

அதாவது 225 எம்பிகளில் கிட்டத்தட்ட 169 எம்பிக்கள் அதிபருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இதை முன்னிட்டு இலங்கையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனே இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிற்பகல் 3 மணியளவில் காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்கெடுப்பு நடந்தால் அது அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Mahinda Rajapaksa-வுக்கு மரண அடி | Su-30 MKI Fighter இந்தியா எடுத்த அதிரடி முடிவு | Oneindia Tamil
    கோத்தபய ராஜபக்சே

    கோத்தபய ராஜபக்சே

    இந்த வாக்கெடுப்பில் கோத்தபய ராஜபக்சேவிற்கு ஆதரவாக வாக்களித்தால் அது எம்பிக்களுக்கு எதிராக திரும்பும். அந்த எம்பிகளை மக்கள் தாக்கும் நிலை ஏற்படும். இப்போதே பொது இடங்களில் எம்பிக்களை மக்கள் தாக்கி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சேவிற்கு ஆதரவாக வாக்களித்தால், அவர்கள் சாலையிலேயே நடமாட முடியாத நிலை ஏற்படும். இதனால் எம்பிக்கள் பலர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக வாக்களித்து அவரை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இப்படி ஒரு சிக்கலில்தான் அவர் மாட்டியுள்ளார். பதவி விலக மறுக்கும் கோத்தபய ராஜபக்சே மக்களின் போராட்டத்தால் பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

    English summary
    Will Gottabaya Rajapaksa be impeached from his president post? What are the possibilities? கொழும்பில் இன்று அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X