அன்று அக்கா மட்டுமில்லேன்னா! பவதாரிணி குறித்து இலங்கையில் யுவன் உருக்கம்
கொழும்பு: தனது இசைப் பயணத்தில் அக்கா பவதாரிணி மிக முக்கியமானவர் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் செல்ல மகள் பவதாரிணிக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டு அது மிகவும் மோசமான கட்டத்தை எட்டியது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக பவதாரிணியும் அவருடைய கணவர் சபரியும் சென்றிருந்தனர்.

அங்கு பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கையில் வாடகை அபார்ட்மென்டில் குடியிருந்த பவதாரிணிக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்டது.
அதன பேரில் பவதாரிணி லங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவர் இலங்கையில் ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது.
இளையராஜா இலங்கைக்கு இசைக் கச்சேரிக்காக சென்ற நிலையில் அங்கு மருத்துவமனைக்கு சென்று தனது மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டார். இதையடுத்து பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனியில் பண்ணையபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இளையராஜாவின் தாய், மனைவி ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டில் பவதாரிணியும் விதைக்கப்பட்டார். இந்த நிலையில் கொழும்புவில் வரும் 24 ஆம் தேதி யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி யுவன் செய்தியாளர்களை கொழும்புவில் சந்தித்தார்.
அவர் கூறுகையில் எனக்கு பியானோ இசைக்க கற்று கொடுத்ததே பவதாரிணிதான். எனது இசை வாழ்வில் எனது அக்கா மிக முக்கியமானவர். இவ்வாறு யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார். இலங்கையில் லங்கா மருத்துவமனையில் கூட பவதாரிணி தனது தந்தை இளையராஜா, தனது அண்ணன் கார்த்திக் ராஜா, தம்பி யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பற்றிதான் அதிகம் பேசினாராம்.
அது போல் சித்தப்பா கங்கை அமரனின் மகன்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர் இவர்கள் மூவர் சேர்ந்தாலே அங்கு ஒரு இசை கச்சேரியே நடக்கும் அளவுக்கு கலாட்டாக்கள், கேலிகள், கிண்டல்கள் என ஜாலியாக இருக்கும். பவதாரிணியின் இறப்பால் இளையராஜாவும் மிகவும் உடைந்து போயுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications