குஜராத்தில் 125 சீட் ஜெயிப்போம்.. "பாஜக கதை க்ளோஸ்".. காங்கிரஸ் உறுதி! அசோக் கெலாட் சொல்றதை கேளுங்க
காந்திநகர்: குஜராத் தேர்தலில் 125 தொகுதிகளில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும் என்றும், இந்த தேர்தலோடு குஜராத்தில் பாஜகவின் சகாப்தம் முடியப்போகிறது எனவும் ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அசோக் கெலாட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆளும் பாஜக மீது குஜராத் மக்கள் மிகப்பெரிய வெறுப்பில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குஜராத்தை சுற்றி சுற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

பாஜகவுக்கு எதிராக வெறுப்பலை..
குஜராத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று குஜராத்தில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பிரச்சாரத்தில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் இந்த பிரச்சாரத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். குஜராத் தேர்தலை முன்னிட்டு வந்த கருத்துக்கணிப்புகளுக்கும், இங்குள்ள கள யதார்த்ததுக்கும் துளி கூட சம்பந்தமில்லை. மாநிலத்தில் எங்கு சென்றாலும் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய வெறுப்பலை வீசுவதை காண முடிகிறது.

வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்கள்..
குஜராத்தில் கொரோனா தொற்றை பாஜக அரசு கையாண்ட விதம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. மேலும், சர்வாதிகாரத்தனமாக ஊரடங்கை பிறப்பித்ததால் மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைகள், நடுத்தர மக்கள், சிறுகுறு வியாபாரிகள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.தங்கள் வாழ்க்கை சீரழிந்து போனதற்கு பாஜக அரசின் கையாளாகாத தனம்தான் காரணம் என அவர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்கையில், எவ்வாறு அவர்கள் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்?

"பாஜக இனி ஆட்சிக்கே வரக்கூடாது"
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மோர்பி பால விபத்தும், அதனால் நேரிட்ட நூற்றுக்கணக்கானோரின் மரணமும் குஜராத் மக்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. முழுக்க முழுக்க பாஜக அரசின் அலட்சியத்தாலும், ஊழல் முறைகேடுகளாலும் தான் இந்த விபத்து நிகழ்ந்தது என்பதை குஜராத் மக்கள் அறிந்துகொண்டனர். இந்த விபத்தில் முறையாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியது. ஆனால், பாஜக அரசு கேட்கவில்லை. நூற்றுக்கணக்கான மக்களின் மரணத்தை ஒரு பொருட்டாக கூட பாஜகவினர் மதிக்கவில்லை. கடைசியில், உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இவை அனைத்தையும் பார்த்த குஜராத் மக்கள், பாஜக இனி ஆட்சிக்கு வரக்கூடாது என உறுதியாக இருக்கின்றனர். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இதைதான் மக்கள் தெரிவிக்கின்றனர்.

125 தொகுதிகளில் வெற்றி..
முன்னெப்போதும் இல்லாத வகையில், பாஜக மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அதே சமயத்தில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என குஜராத் மக்கள் விரும்புகிறார்கள். உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரியவந்ததால் தான் பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷா கழுகை போல குஜராத்தை வட்டமடித்து வருகிறார்கள். தோல்வி பயத்தின் வெளிப்பாடே அது. எவ்வளவுதான் மோடியும், அமித் ஷாவும் முயன்றாலும் இந்த முறை குஜராத்தில் பாஜக படுதோல்வி அடையப்போவது உறுதி. இந்த தேர்தலில் 125 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். பாஜகவுக்கு இந்த தேர்தலுடன் குஜராத் மக்கள் முடிவுரை எழுதி விடுவார்கள்" இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications