Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளே சிவப்பு.. வெளியே மஞ்சள்.. காருக்குள்ளே கலக்கும் ஷிவானி.. சுற்றி சுற்றி வலம் வரும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்காரு வாங்கினது தான் வாங்குனாரு, அதுக்கு பிறகு ஷிவானி காரை விட்டு வெளியே இறங்கவே மாட்டார் போலயே....

மாடர்ன் உடையில் காருக்குள்ளேயே தவமிருக்கும் ஷிவானியை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் காத்து கிடக்கின்றனர்.

எப்பதான் பழைய மாதிரி வலம் வருவாரோ என்று ரசிகர்களின் மனக்குமுறல் கமெண்ட் களில் ஒலிக்கிறது.

காருக்குள்ள யாரு

காருக்குள்ள யாரு

சின்னத்திரையில் இதுவரைக்கும் யாரும் வாங்காத பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை ஷிவானி வாங்கி இருக்கிறார். அந்த காரை இவர் ரொம்ப நாள் ஆசைப்பட்டு காத்திருந்து வாங்கி இருக்கிறாராம். அதனால் அதனை விட்டுப் பிரிவதற்கு மனசில்லாமல் அதனுள்ளேயே காலை முதல் இரவு வரைக்கும் இருக்கப் பழகி விட்டார் போல, ஏற்கனவே இரு நாள்களுக்கு முன்புதான் இவர் காருக்குள்ளே ஒரு குட்டித் தூக்கத்தை போட்டு அந்த போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இன்று கலக்கலாக காருக்குள்ளே இருக்கும் போது சைடு கேப்பில் சைடு போஸ் போட்டோ ஒன்றை எடுத்திருக்கிறார். இந்த போட்டோஸ் கொஞ்சம் தெளிவு இல்லாமல் இருந்தாலும் அதனையும் விட மாட்டேன், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று வெறியாக பதிவிட்டிருக்கிறார்.

பகல் நிலவாக பிரகாசம் தான்

பகல் நிலவாக பிரகாசம் தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ஷிவானிக்கு முதல் சீரியலிலே பெரும் வரவேற்பு கிடைத்து விட்டது. சீரியலில் இவர் இந்த அளவிற்கு பாப்புலர் ஆவார் என்று இவரே முதலில் நினைக்கவில்லையாம். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டது. முதல் சீரியலிலேயே இளைஞர்களையும் அதிகமாக கவர்ந்து விட்டார். இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பே சமூகவலைத்தளத்தில் செம பிஸியாக இருக்கிறார். டிக் டாக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் இவர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். அதுவும் டிக்டாக்கில் இவர் தினமும் பல வீடியோக்களை பதிவிட்டு வந்ததால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போடுவதில் தவறுவதில்லையாம். ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போதே போட்டோ ஷூட் மற்றும் பல ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் இவர் பதிவிடுவதை ரசிப்பதற்காகவே இவருடைய ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்திருக்கின்றனர்.

மறுபடியும் அப்படி பண்ண மாட்டீங்களா!!

மறுபடியும் அப்படி பண்ண மாட்டீங்களா!!

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் பட்டாளத்தை பார்த்துத்தான் ஷிவானிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று பரவலாக பேசப்பட்டு வந்தது, அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான். இவருக்கு சீரியலிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஆனால் இவர் ஒரு சில சீரியல்களில் நடித்து விட்டு திடீரென்று சீரியலை விட்டு வெளியேறிவிட்டார். இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்பதை கேட்டதும் சீரியல் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி இருக்கின்றனர். எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவார் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு இனி நான் நடித்தால் சினிமாக்களில் கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று ஷிவானியும் சீரியல் பக்கம் திரும்பவே இல்லை. ஆனாலும் சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவாக இருந்ததால் ரசிகர்கள் கொஞ்சம் மனதை தேற்றிக் கொண்டு இருந்தனர். மாலை நேரத்தில் இவருடைய தரிசனம் ரசிகர்களின் மனதை மயக்கி தான் வந்தது. தொடர்ந்து 4 மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி ஷிவானியாக ரசிகர்களை கவர்ந்து இழுத்து வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் அப்படியே மாறி விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய விளையாட்டை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்திருக்கிறது. அதனால் இவர் எபபோது இந்த நிகழ்ச்சியை விட்டு மீண்டும் வெளியே வந்து சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போடுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அடடா என்ன அழகு

அடடா என்ன அழகு

நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே இவர் வெளியேறி வந்தாலும் இவர் இதற்கு முன்பு இருந்தது போல இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லை. எப்பவாவது தான் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் சிலர் இவரை ரொம்பவே மிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து போஸ்ட் போட சொல்லி கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருக்கும்போது உடல் எடை கூடி விட்டார். அதுமட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இவரைப் பலரும் உடலமைப்பைப் பற்றி கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இதனால் வெளியே வந்த ஷிவானி வெளியே வந்த பிறகு உடற்பயிற்சியில் வெறிகொண்டு செய்து மீண்டும் பழைய ஷிவானி ஆக மாறிவிட்டார். அதுவும் தற்போது வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கிற வகையில் உடம்பையும் அழகையும் மெருகேற்றி இருக்கிறார். இவர் இப்ப எல்லாம் எப்பவாவது தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுகிறார். அந்த மாதிரிதான் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் பார்த்து இவருடைய ரசிகர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருக்கின்றனர். என்னதான் புது கார் வாங்கினாலும் காருக்குள்ள அப்படியா இருப்பாங்க! !என்று சிலர் ஷாக் ஆனாலும், தலைவி மீண்டும் வந்து விட்டீர்களா என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதனால் தான் அவர்களுடைய கமெண்ட்ஸ் களில் ஹார்ட்டின் பறக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+