29 வயது பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை.. 15 வயது சிறுவன் அதிரடி கைது.. திட்டக்குடியில்!
கடலூர்: 29 வயது பெண்ணை 15 வயது சிறுவன்... வழிமறித்து மடக்கி பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில் உள்ளது பெரியார் நகர்... இங்கு வசித்து வரும் பெண்ணுக்கு 29 வயதாகிறது.. திருமணமானவர்... இவரது வீட்டில் கழிப்பறை இல்லை என கூறப்படுகிறது. அதனால் திறந்தவெளி பகுதிக்குதான் வரவேண்டும் என்றும் தெரிகிறது.

அப்படித்தான் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிக்க அந்த பெண் சென்றுள்ளார்... அவர் செல்வதை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் கவனித்தார்.. அந்த பெண்ணின் பின்னாடியே சென்ற சிறுவன், திடீரென பெண்ணை வழிமறித்துள்ளார். பிறகு பாலியல் துன்புறுத்தல் செய்யவும் முயன்றுள்ளான்.
இதை சிறிதும் எதிர்பாராத அந்த பெண் அலறி கூச்சலிட்டவாறே சிறுவனிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடிவந்தார்.. நடந்த விஷயத்தை கணவரிடம் சொல்லி அழுதார். இதை கேட்டு அதிர்ந்த கணவர், திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இதை பற்றி புகார் சொல்லி சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டான்.. இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைத்தனர்.
29 வயது திருமணமான பெண்ணை 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி பெண்களை அதிர்ச்சியில் மட்டுமல்ல.. அச்சத்திலும் சேர்த்து ஆழ்த்தியுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications