என்.எல்.சி.யில் 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு! ஒரு தமிழரை கூட தேர்வு செய்யாத அவலம் -வேல்முருகன்
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி.யில், 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு தமிழரை கூட தேர்வு செய்யாதது ஏன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.
மேலும், தமிழர்களிடம் நிலம் பிச்சை எடுத்து நிறுவப்பட்ட என்.எல்.சி என மிகக் கடுமையான சொற்களால் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பிறமாநில இளைஞர்களை முறையற்ற வழிகளில் மத்திய அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என வேல்முருகன் ஆவேசம் காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமான அறிக்கையில் கூறியிருப்பதாவது;

என்.எல்.சி நிறுவனம்
என்.எல்.சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் மின்தேவைக்காக காமராசர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்.எல்.சி. நிறுவனம். இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு 30 தமிழர் கிராம மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்தனர்.

வேலைவாய்ப்பு
அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பது தான். ஆனால், அப்படியான உறுதிமொழியை ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் தொடர்ந்து மீறி வருவது கண்டனத்துக்குரியது. அதாவது, என்.எல்.சி நிறுவனத்தில் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி, அதனைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வையும் நடத்தி முடித்திருக்கிறது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி
இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் மருத்துவ பரிசோதனையும் நடைபெற இருப்பதாக என்.எல்.சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கண்ட வேலைவாய்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலை கடந்த ஜூலை 19 ஆம் தேதி என்.எல்.சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 299 பேரும் வட இந்தியர்கள் ஆவார்கள். இதில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது வேதனையானது.

கண்டனத்துக்குரியது
தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்கள், அந்நிறுவனத்தின் பணியிலிருந்து இறந்தவரின் வாரிசுகள், பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் என அனைவரையும் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, பணியில் வட மாநிலத்தவர்களைத் தேர்வுசெய்து, சேர்ப்பது திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல். இது கண்டனத்துக்குரியது.

தமிழர்களிடம் பிச்சை
தமிழர்களிடம் பிச்சை எடுத்து நிறுவப்பட்ட என்.எல்.சி நிறுவனத்தில், தொடர்ச்சியாக திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்கு இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்கப்படாமலும் திட்டமிட்டு என்.எல்.சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர்.

பிறமாநில இளைஞர்கள்
தொழில், வணிகம், வேலை வாய்ப்பு போன்ற பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளில் அந்தந்த மொழித் தாயகத்தில் அந்தந்த மொழி மாநிலத்தவர்க்கு முன்னுரிமையும் முழு வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகத் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுத் துறைகளில் தமிழர்களைப் புறக்கணித்து, பிறமாநில இளைஞர்களை முறையற்ற வழிகளில் ஒன்றிய அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாபெரும் போராட்டம்
எனவே, என்.எல்.சி நிறுவனம் பொறியாளர் வேலைவாய்ப்பிற்கு நடத்திய நேர்முகத்தேர்வை ரத்து செய்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடக்க உள்ள ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையை உடனடியாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், தமிழ்நாட்டு இளைஞர்கள், ஒருமித்த கருத்துள்ள அரசியல் அமைப்புகளை ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

அநீதியைத் தடுப்போம்
தமிழர்களின் வாழ்வுரிமை பறிபோகும் இந்த அநீதியைத் தடுக்க தமிழ்நாடு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதோடு, என்.எல்.சி நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், நிலம், வீடுகளை வழங்கிய வாரிசுகளுக்கும், தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications