9 சென்ட் நிலம்..கடலூரில் அசல் ஆவணங்கள் போல தயாரான கிரைய பத்திரம்.. ரூ.3 கோடி சொத்துக்களை வளைத்த பெண்
கடலூர்: பாடுபட்டு பணம் சம்பாதித்து, அதில், சொத்துக்களை வாங்கி, அதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து, அசல் பத்திரத்தை கையில் வைத்திருந்தபோதிலும்கூட, மோசடி என்பது நடந்துவிடுகிறது.. போலி பத்திரங்களை தயார் செய்வதை தடுக்க தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறையும் பெரும் முயற்சி எடுத்தும், குற்றங்கள் குறையவில்லை. இதோ கடலூரில் நிலம் மோசடியில் கிட்டத்தட்ட 7 பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்..
தமிழக பத்திரப்பதிவு, வருவாய்த்துறையில் சமீபகாலமாகவே சொல்ல முடியாத அளவுக்கு லஞ்சம் பெருக்கெடுத்து வருகிறது.. ஒருபக்கம் லஞ்சக்கொடுமையென்றால், இன்னொரு பக்கம், போலியான ஆவணங்களை, அசல் ஆவணம் போல அச்சரித்து, அதை வைத்து கோடிக்கணக்கில் மோசடிகள் நடக்கின்றன. போலி ஆவணங்களால், நில அபகரிப்பு தொடர்பான புகார்களும் அதிகரித்து வருகின்றன..

இவைகளை தடுக்கும் முயற்சியில் பதிவுத்துறையை எடுத்து வந்தபோதிலும், போலி பத்திர நடமாட்டத்தை தடுக்கவே முடியவில்லை. இதோ, கடலூரில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
9 சென்ட் நிலம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ளது அங்குசெட்டிப் பாளையம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்.. இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.. இவரது மகன் சிற்றரசுக்கு 33 வயதாகிறது.. இவருக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள 9 சென்ட் நிலம் சொந்தமாக இருந்தது..
இதனை அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் நாகராஜ் மனைவி தனலட்சுமி என்பவருக்கு சட்டத்திற்கு புறம்பாக போலி ஆவணங்கள் தயாரித்து, கிரையம் பெற்றுள்ளார்.. கடந்த 4-ந் தேதி புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது.
இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த சிற்றரசு, தன்னுடைய வீட்டு மனையை போலியான ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாக தெரிவித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்..
பல கோடி ரூபாய் இழப்பு
இறுதியில், ஹரி கிருஷ்ணன், நாகராஜ், அவரது மனைவி தனலட்சுமி, ஆவண எழுத்தர் சீனுவாசன், புதுப்பேட்டை சார் பதிவாளர் ராஜேஷ் ஆகிய 5 பேர் மீதும் போலியாக ஆவணங்கள் தயாரித்தல், சட்டவிரோதமாக பதிவு செய்தல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற முறைகேடுகளுக்கு சில அதிகாரிகளே உடந்தையாக இருக்கிறார்கள்.. திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி, இப்படித்தான் முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்த டிஐஜி முறைகேட்டில் ஈடுபட்டது மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது..
6 வருடங்கள் சார் பதிவாளர்
போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அதிர்வலையே இன்னும் அடங்கவில்லை.. அதாவது, 1965ல் சார்பதிவாளராக பணியில் சேர்ந்தவர் சேர்ந்த நாள் முதலே முறைகேடுகளில் ஈடுபட்டாராம். ஒருவர் ஒரு அலுவலகத்தில் சார்பதிவாளராக 3 வருடங்களுக்கு மேல் பணிபுரியக்கூடாது என்கிற விதிகள் இருந்தபோதிலும், கோவில்பட்டி சார்பதிவு அலுவலகத்தில் தொடர்ந்து 6 வருடங்கள் வேலை பார்த்துள்ளார்..
தேசிய நெடுஞ்சாலையில் பல நூறுகோடி மதிப்புள்ள நிலங்களை வாங்கி குவித்தது, திருப்பூரில் போலி ரசீது மூலம் பத்திரப்பதிவு செய்து, பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார். இறுதியில், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் இன்றைய தினம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications