Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணுகுமுறையில் சிறிய மாற்றம்.. கோடிகளில் வீடு, கார், நிலம்... பலாப்பழத்தால் கோடீஸ்வரரான விவசாயி

Subscribe to Oneindia Tamil

கடலூர்: பலாப்பழம் பயிரிட்டு வரும் விவசாயி ஒருவர் வீடு,கார், நிலம் என கோடீஸ்வரராக இருக்கிறார். ஆச்சயர்ப்படுத்தும் விஷயம் என்றாலும், நாம் சொல்ல வருவது அதுவல்ல.. கோடிகளை சம்பாதித்த அவர் மேற்கொண்ட அணுகுமுறைதான் விவசாயிகள் பலர் கற்க வேண்டிய முக்கியமான பாடம்.

இன்றைய விவசாயிகள் லாபம் சம்பாதித்தாலே தலைப்பு செய்தி என்கிற நிலை இருக்கிறது என்றால், எந்த அளவிற்கு விவசாயிகள் நிலை இந்தியாவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அரசுஎன்ன தான் திட்டம் போட்டாலும், எவ்வளவு தான் உதவிகள் செய்தாலும், கடன்களை தள்ளுபடி செய்தாலும் பெரிய மாற்றம் அவர்கள் வாழ்வில் இதுவரை ஏற்படவில்லை.

A farmer who became a millionaire with with house, car and land by selling jackfruit

விவசாயிகள் வருமானம் இதுவரை இரட்டிப்பு ஆகவில்லை... மத்திய அரசின் பல ஆண்டு இலக்கு இதுதான். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் விவசாயம் மட்டுமே செய்வது தான். மேலும் கடனில் சிக்கி மீள முடியாமல் தவிப்பது தான் விவசாயிகள் எதார்த்தமாக உள்ளது.

விவசாயம் இந்தியாவில் லாபகரமான தொழிலாக இல்லாமல் இருக்க அடிப்படையிலேயே நிறைய பிரச்சனை உள்ளது. இந்தியா முழுவதும் விவசாயிகள் ஒன்றுபடவேண்டும். இந்தியா முழுவதும் விவசாயிகள் என்ன பயிரிடவேண்டும், எவ்வளவு பயிரிட வேண்டும், எந்த பயிர் எவ்வளவு பயிரிட வேண்டும், எவ்வளவு பேர் குறிப்பிட்ட பயிரை பயிரிடலாம், எந்த பயிரிட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்பது குறித்து சரியான வழிகாட்டுதல்கள் தேவை. அதை கட்டாயம் விவசாயிகளும் பின்பற்ற வேண்டும்.

விவசாயிகளை ஏமாற்றி இடைத்தரகர்கள் பெரும் லாபம் சம்பாதிப்பதை தடுப்பது, உழவர் சந்தைகளை நாடு முழுவதும் அமைத்து அதன் வழியாக மட்டுமே ஏற்றுமதி மேற்கொள்வது என மாற்று நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்பட வேண்டும். மேலும் செலவுகளை குறைக்கும் வகையில் விவசாய முறை, உரம்,தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது.

இந்நிலையில் விஷயத்திற்கு வருவோம். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த கருணாகரன் என்ற விவசாயி 7 ஏக்கர் பலா தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானத்தில் வீடு, கார், நிலம் என கோடிகளில் வாழ்கிறார். பாலா தோட்டத்தில் விற்ற வருமானத்தில் கட்டிய வீட்டின் மதிப்பு இன்று ரூ. 3 கோடி என்கிறார். சுமார் 35 வருடங்களுக்கு முன்பு பலா கன்று வைத்த விவசாயி கருணாகரனுக்கு, ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருகிறதாம்.

பலா பராமரிப்பு: பலா மரத்தை பொறுத்தவரை பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாது. இதனால் தான் பலா மரத்தையே தன் தோட்டத்தில் வளர்ந்து பராமரித்து வருகிறாராம் கருணாகரன். பெரிய அளவில் ஆட்கள் தேவை இல்லை என்பது, தானே 7 ஏக்கரையும் பாத்துக்கொள்கிறார். காய் வெட்றதுக்கு மட்டும் ஒரு ஆளை பயன்படுத்துகிறாராம்.

பலா தண்ணீர்: பலாவுக்கு தண்ணீரும் பெரிதாக தேவைப்படாது என்கிறார் கருணாகரன். தென்மேற்கு பருவ மழை 3 மாதம் முதல் நான்கு மாதமும், வடகிழக்கு பருவ மழை ஒரு மாதம் முதல் இரண்டு மாதமும் பெய்கிறது. எனவே மழை இல்லாத மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒரு சில முறை தண்ணீர் பாய்ச்சுகிறார் விவசாயி. தண்ணீர் பிரச்சனை பெரியதாக பலாவிற்கு வராத என்கிற நிலையில் பலாப்பழம் விற்பனை செய்வதிலும் எந்த பிரச்சனையும் வராது என்கிறார். வியாபாரிகளே நேரில் வந்து எடுத்து செல்வார்கள் என்றும், அப்படி இல்லாவிட்டால் கமிஷன் மண்டிக்கு அனுப்பலாம் என்றும் கூறினார்.

கோடீஸ்வரர்: பலாவில் இருந்து வந்த வருமானத்த சேமிச்சு வச்சு நிலம் வாங்கி உள்ளார். இப்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடியாம். அதேபோல 15 வருசத்துக்கு முன்னாடி 30 லட்சத்துல கட்டிய வீட்டின் மதிப்பு இன்று ஒரு கோடி என்றும் நெகிழ்கிறார் விவசாயி கருணாகரன் . விவசாயி கருணாகரன் ஃபோர்ட் காரும் வைத்திருக்கிறாராம். நல்லா வருமானம், நிம்மதியான இவரது வாழ்க்கைய பார்த்து அந்த பகுதியில் பலரும் பலா மரமே வளர்க்கிறார்களாம்..

அணுகுமுறை: விவசாயி கருணாகரன் சொன்ன முக்கியமான விஷயம் இதுதான்.. விவசாய வேலைக்கு முன்பு போல் அதிகம் ஆள் கிடைப்பது இல்லை.. அதனால் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை பயிரிட்டால் தண்ணீர் ஒரு பிரச்சனை என்றால் பராமரிப்பு இன்னொரு பிரச்சனை. எனவே தான் பலா மரத்தை பயிரிட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறாராம் கருணாகரன்.. மாறிவரும் வாழ்க்கை முறையில் வித்தியாசமாக யோசிப்பவர்கள் ஜெயிக்கிறார்கள் அதில் விவசாயி கருணாகரனும் ஒருவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+