ஒரு மாங்கா..ரெண்டு கல்லு! கள்ள காதலிக்காக சுடுகாட்டில் கொலை! விழுப்புரத்தில் மயங்கிய இன்ஸ்டா குயின்!
கடலூர் : கடலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுனர் சுடுகாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கள்ளக்காதலி விழுப்புரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில், நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.

கடலூரில் கொலை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக நண்பர்கள் சுமன் மற்றும் அவரது நண்பரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் படி, ஆட்டோ டிரைவர் சக்திவேலுக்கும் அவரது நண்பர் சுமனுக்கும் கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் சக்திவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சக்திவேலின் உறவினர்கள் பண்ருட்டி சேலம் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்த பிறகு உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இந்த வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

கள்ளக் காதல் விவகாரம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சுமன், இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். அதே பகுதி சேர்ந்த பூமிகா திருமணம் ஆகி கணவர் இறந்த நிலையில் தாய் வீட்டில் வசித்து வருகிறார் பூமிகாவும் சுமனும் தொடர்பில் இருந்த நிலையில் தற்பொழுது பூமிகா சக்திவேலுடன் பழக்கம் ஏற்பட்டதால் சக்திவேலுக்கும் சுமனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.

சமாதானம்
இதையடுத்து, நேற்று இரவு சமாதானம் பேசுவதாக கூறி சக்திவேலை அழைத்து சென்றுள்ளார் சுமன் பேச்சை நம்பி சக்திவேல் சென்றார். தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது பூமிகா விவகாரத்தில் தலையிடகூடாது" என்று சுமன் கூறியதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது சுமனும் அவனது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.

போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்ததும் டிஎஸ்பி சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான வாலிபர் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சுமன் நண்பன்கள் இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதற்கு காரணமான கள்ள காதலி பூமிகாவை போலீஸார் தேடி வந்தனர்.

தற்கொலை முயற்சி
இந்நிலையில், பூமிகா பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் சென்று விழுப்புரம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இளம் பெண் விஷம் குடித்து இருப்பதாகத் தெரிவித்தனர்.இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications