கடலூர் நகர்மன்ற கூட்டரங்கில் ரகளை! விஜய் போட்டோவை திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இணைந்து அகற்றம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் நகராட்சியில் நகர்மன்றக் கூட்டரங்கில் முதல்வர் விஜய்யின் படத்தை வைக்கக் கூடாது என நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக, திமுக கவுன்சிலர்கள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டரங்கு உள்ளது. இங்கு பொதுவாக முதல்வரின் புகைப்படம் இருக்கும். அந்த வகையில் முதல்வர் விஜய்யின் புகைப்படமும் இருந்தது.

ADMK

இன்றைய தினம் நகர்மன்ற கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட நகர்மன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் கலந்து கொண்டார்.

அப்போது முதல்வர் விஜய்யின் படத்தை அகற்ற வேண்டும் என திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அதிமுக கவுன்சிலர் ஒருவர், "இங்கு தவெக கவுன்சிலர் யாரும் இல்லாத போது , முதல்வர் போட்டோ மாட்டக் கூடாது" என்றார். உடனே நகராட்சி ஆணையரோ, "இது அரசு கட்டடம், முதல்வர் என்ற முறையில் அவரது படத்தை வைப்பதில் தவறில்லை" என்றார்.

அதற்கு கவுன்சிலர்கள், "இது அரசு கட்டடம் இல்லை, பொதுவான கட்டடம், முதல்வர் என்றால் உங்கள் அறையில் வைங்க சார்" என கூறிவிட்டு அந்த அதிமுக கவுன்சிலரே விஜய்யின் புகைப்படத்தை அகற்றினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு கோவை மாநகராட்சியிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. கோவை மாநகராட்சி மேயர் அறையில் முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை வைக்க திமுக மேயர் ரங்கநாயகி மறுத்தார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் படத்தை அகற்றிவிட்டு விஜய் படத்தை வைக்க கூடாது என அவர் மறுத்ததால் சர்ச்சை கிளம்பியது.

அது போல் நெல்லை மாநகராட்சியில் முதல்வரின் படத்தை மேயர் இருக்கைக்கு நேரடியாக மேலே வைக்க வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தியதால் மேயர் ராமகிருஷ்ணன் தனது இருக்கையில் அமர மறுத்து சோபாவில் அமர்ந்து பணியாற்றினார்.

குன்னூர் நகராட்சியில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் படங்கள், தவெகவினரின் புகாரை அடுத்து நகராட்சி அலுவலர்கள் அகற்றியதால் அங்கு வாக்குவாதம் முற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அரக்கோணம், கரூர் நகராட்சிகளிலும் முதல்வர் படங்களை வைப்பதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+