கனமழை எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு
கடலூர்: 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை திறக்கப்படவுள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்,
கடந்த 1.5 ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது.
இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இது மாணவர்களுக்கு மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்த வல்லுநர்கள், விரைவில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வேக்சின் பணிகள்
வேக்சின் பணிகளால் கொரோனா பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் முடிவெடுத்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 9 முதல் +2 மாணவர்களுக்குக் கடந்த செப். 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு
வைரஸ் பாதிப்பு தற்போது கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்து. காலை, மாலை எனச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களும் மீண்டும் வகுப்புகளுக்குத் திரும்ப ஆர்வத்துடன் உள்ளனர்.

வானிலை மையம்
இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 3 நாட்களுக்குக் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தச் சூழலில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை, கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை திறக்கப்படவுள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications