அண்ணாமலைக்காகவே "விரலை" துண்டித்து கொண்ட பாஜக பிரபலம்.. ஒரே வெட்டு.. கோவையில் ஜெயிக்க மாட்டாரா? பரபர
கடலூர்: அண்ணாமலைக்காக தீவிரமான பாஜக நிர்வாகி ஒருவர் தன்னுடைய கைவிரலை வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த முறை கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.. இதையடுத்து, தேசிய அளவில் கோவை தொகுதியின் மீது கவனம் குவிந்துள்ளது.. தமிழகத்தின் மிகமிக முக்கிய தொகுதி என்பதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் கோவையிலேயே பிரதானமாக குவிந்து வருகிறது.

அண்ணாமலை: மாநில தலைவர் என்பதாலும், சொந்த தொகுதி என்பதாலும், கோவையில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் அண்ணாமலை உள்ளார்...
தமிழகத்திலேயே செல்வாக்குமிக்க தொகுதி என்பதால், இந்த தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டிய அவசியமும் தமிழக பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தனை எதிர்பார்ப்புகள் உள்ளதால், கோவை தொகுதியின் பிரச்சாரங்கள் ஒவ்வொருநாளும் பரபரப்புடனே காணப்பட்டு வந்தது.
இதற்கு நடுவே அவ்வப்போது கருத்து கணிப்புகளும் வெளியாகி வந்தன.. அவைகளில் எல்லாம், பாஜகவுக்கு பெருத்த ஆதரவு என்பது எங்குமே கிடைக்கவில்லை என்பதுபோல கணிப்புகள் பதிவாகியிருந்தன. எனினும் பாஜக தொண்டர்கள், தங்களுக்கு பெருத்த வாக்குகள் கிடைத்துவிடும் என்றும், எப்படியும் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்துவிடும் என்றும் என்றும் பெருத்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதிலும் அண்ணாமலை ஜெயித்துவிட வேண்டும் என்பதிலும் ஆசைப்பட்டு காத்து கொண்டிருக்கிறார்கள் தாமரை கட்சியினர்.
ராமலிங்கம்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை.ராமலிங்கம்... இவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். தீவிரமான பாஜக பற்றுள்ளவர்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோயம்புத்தூர் தொகுதியில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வந்தனர்.. இவர்களுடன் சேர்ந்து துரை. ராமலிங்கமும் கோயம்புத்தூரில் கடந்த 10 தினங்களாகவே தங்கியிருந்து அண்ணாமலைக்காக பிரச்சாரம் செய்து வந்தார்.
நேற்று மாலையுடன் பிரச்சாரமும் முடிந்துவிட்டது.. திடீரென துரை.ராமலிங்கம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கட்சித் தொண்டர்கள் முன்னிலையிலேயே, தன்னுடைய இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென எடுத்து, இடது கை ஆட்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்..
வெற்றி பெறுவார்: இதனால் கையிலிருந்து ரத்தம் பொலபொலவென கொட்டியது.. ஆனால், அதையும் பொருட்படுத்தாத ராமலிங்கம், "அண்ணாமலை வெற்றி பெறுவார்" என்று முழக்கமிட்டவாறே கைவிரலை துண்டித்தார்... இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பாஜக தொண்டர்கள், உடனடியாக அவரை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர்.
அங்கு ராமலிங்கத்துக்கு உடனடியாக ஆபரேஷன் நடந்தது.. பிறகு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு துண்டிக்கப்பட்ட விரலும் இணைக்கப்பட்டது... இப்போது ராமலிங்கம் உடல் தேறி வருகிறது.
காளிக்கு பலி: இப்படித்தான் கர்நாடகாவிலும் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.. 3வது முறையாக பிரதமர் மோடி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, அருண் வார்னகேர் என்பவர் தன்னுடைய இடது கை ஆள்காட்டி விரலை வெட்டிக்கொண்டு, காளிக்கு பலி கொடுத்தார். இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியதையடுத்து, அதே ரூட்டில் கடலூர் தொண்டரும், கைவிரலை துண்டித்து கொண்டுள்ளார்..
இது குறித்து ராமலிங்கம் சொல்லும்போது, "நான் 10 வருடத்துக்கும் மேலாகவே பாஜகவில் உள்ளேன்... 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தேன்.. அப்போது, அங்கிருந்தவர்கள் என்னிடம் அண்ணாமலை நிச்சயம் தோல்வியை சந்திப்பார் என்று சொன்னார்கள். இது எனக்கு மனவருத்தத்தையும், வேதனையையும் தந்து.. அதனால், அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, என்னுடைய விரலை வெட்டிக் கொண்டேன்" என்றார்.
அதிர்ச்சி: பாஜகவின் தீவிரமான தொண்டர் ஒருவர், மாநில தலைவர் அண்ணாமலைக்காக கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications