கடலூர் மாவட்டத்தில் வெளிநாட்டவர்கள் வீடு, விடுதிகளில் தங்கியுள்ளார்களா? எஸ்பி முக்கிய அறிவிப்பு
கடலூர்: இந்திய அரசின் உத்தரவுபடி வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள், அதாவது வீடு, விடுதி, ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள், வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்துள்ளோர் விவரங்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாள ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "இந்திய அரசின் உத்தரவுபடி வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள், அதாவது வீடு, விடுதி, ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள், வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்துள்ளோர், வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு இங்கு தங்கக் கூடியவர்கள் பற்றிய விவரங்களை உடனே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அயல் நாட்டினர் பிரிவில் உடனடியாக நேரில் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை பற்றிய விவரங்களை https://indianfrro.gov.in/frro/sform என்ற இணையதள முகவரியில் உள்ள எஸ்-விண்ணப்பம் என்ற படிவத்தை பூர்த்தி செய்து தெரியப்படுத்த வேண்டும்.
அதுபோல் உறவினர்களின் வீடு மற்றும் ஓட்டல், விடுதி, கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் அயல்நாட்டினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோர், அயல் நாட்டினரின் வருகை பதிவினை https://indianfrro.gov.in/frro/FormC என்ற இணைய தள முகவரியில் உள்ள சி-விண்ணப்பம் என்ற படிவத்தில் வெளிநாட்டவர் பற்றிய விவரத்தை பூர்த்தி செய்து 24 மணி நேரத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
இதை மீறுபவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946, பிரிவு 14 (C) -படி அபராதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது சம்பந்தமான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள அயல்நாட்டினர் பிரிவை அணுகி அறிந்து கொள்ளலாம்" இவ்வாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications