தயவு செய்து வீட்டிலேயே இருங்க.. நடு ரோட்டில்.. 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாலையில் நடுவே 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டுள்ளது.
Recommended Video
கடலூா் மாவட்டத்தில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளி நாடுகளிலிருந்து திரும்பிய சுமாா் 3,600 போ் மற்றும் அவா்களது குடும்பத்தினா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனனா். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் வரும் 14 ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் ஒருசிலர் அத்தியாவசிய தேவைகளின்றி வீதிகளில் சுற்றி திரிந்து வருகின்றனர். அவ்வாறு சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து, வழக்கு பதிவு செய்தாலும், வீதிகளில் தேவையின்றி சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 1,864 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 604 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடலுார் சிறகுகள் குழுவின் சார்பில், கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் பகல் இரவு பாராமல் பணிபுரிந்து வரும் காவல்துறை, சுகாதாரத்துறை, துாய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பொதுமக்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்து கொரோனா வைரஸை விரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுமார் 3,400 சதுர அடியில் பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

கடலுார், பாரதி சாலை, டவுன் ஹால் முன்பு வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.


-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications