"தவிக்க விட்டுட்டு போய்ட்டீங்களே" கோழி வண்டி மோதி.. உடல்நசுங்கி பலியான தந்தை மகள்.. கதறிய உறவுகள்

மினி லாரி மோதியதில் தந்தை - மகள் உடல்நசுங்கி பலியானார்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: வேகமாக வந்த கோழி ஏற்றி சென்ற மினி லாரியானது, பைக்கில் பலமாக மோதியதில் தந்தை - மகள் இருவருமே சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். "எங்களை இப்படி தவிக்க விட்டுட்டு போய்ட்டீங்களே.." என்று சடலங்களை கட்டிப்பிடித்து கொண்டு உறவினர்கள் அழுத சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

விருத்தாசலம் ஆயர்மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அடகுக் கடை நடத்தி வந்தார்.
இவரது மகள் திவ்யபிரியா.. 23 வயதாகிறது!!

bike accident and father, daughter dies near cuddalore

பிடெக். பட்டதாரியான இவர் வங்கி வேலைக்காக விண்ணப்பித்தாா். அதற்காக தன்னை தயார்படுத்தியும் வந்தார். இந்த நேர்முகத் தேர்வு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக திவ்யப்ரியா தனது தந்தை வேல்முருகனுடன் நேற்று பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் நோக்கி இவர்கள் சென்று கொண்டிருந்தனர். ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்த போது, கோழி ஏற்றி கொண்டு ஒரு மினி லாரி வந்தது.. திடீரென நிலைதடுமாறி வேல்முருகன் பைக்கில் மோதியதில், தந்தை - மகள் இருவருமே தூக்கிவீசப்பட்டனர்.. வேல்முருகனும், திவ்யபிரியாவும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். ஆனால், அந்த கோழி ஏற்றி சென்ற மினி லாரி நிற்காமலேயே வேகமாக சென்றுவிட்டது.

இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் , திவ்யபிரியா உடல்களை பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

விபத்து கேள்விப்பட்டு வேல்முருகன் குடும்பத்தினரும், உறவினர்களும் பதறி அடித்து கொண்டு வந்தனர்... இருவரது உடல்களை கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

விருத்தாசலம், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை அருகே, இந்த குறிப்பிட்ட ஒரே இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதாக சொல்லப்படுகிறது.. இதற்கான உரிய நடவடிக்கையும் உடனடி தேவை என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+