Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனகசபை கலாட்டா.. நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டதா? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நடந்த தகராறில் தீட்சிதர் ஒருவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கோயிலில் தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தடையை மீறி காவல் துறையினர் தீட்சிதரை தள்ளி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை இதை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத திருமஞ்சன தரிசனத்தையொட்டி 4 நாட்கள் கனகசபையில் ஏறி வழிபட பக்தர்களுக்கு கோயில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்களும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறை பாதுகாப்புடன் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றினர். அங்கு வந்த பக்தர்களும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் காவல்துறையினருடன் ஏறி வழிபட முயன்றனர். அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தீட்சிதர்கள் புகார்: கனகசபை விவகாரம் குறித்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராமன் மற்றும் தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர் அப்போது, "கோயிலில் தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தடையை மீறி காவல் துறையினர் உதவியுடன் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கனகசபையில் ஏறியுள்ளனர். இது ஆகம விதிக்கு எதிரானது. எனவே இனிவரும் காலங்களில் கோயிலுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Chidambaram Natarajar Temple Deekshithars Poonal is cut? what happened?in Kanagasabai

பூணூல் அறுப்பு: செவ்வாய்கிழமையன்று கனகசபையில் பூஜையில் இருந்த கற்பக கணேச தீட்சிதரை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தள்ளி விட்டு, அவரது உடைகள் ஈரமாகி பூணூல் அறுக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

அறநிலையத் துறை மறுப்பு: தீட்சிதர்கள் தெரிவித்த புகாரை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். "அரசாணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர். அப்போது தீட்சிதர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர். காவல் துறையினர் மற்றும் அறநிலையத்துறையினரின் சுண்டு விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது. அவரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன என்றார்.

தீட்டு பட்டு விட்டதா?: கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறக்கூடாது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால், தீட்டு என கருதி, அந்த தீட்சிதர் உடுத்தியிருந்த உடைகளை மாற்றிவிட்டு, புது துணியை போட்டுக் கொண்டு, மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை என்றும் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளனர்.

கனகசபை வழிபாடு: சர்ச்சைகளுக்கு இடையே 28ஆம் தேதி காலை 7 மணி முதல் கனகசபையில் ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபாடு நடத்தினர். தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களுடன் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+