சிதம்பரம் பேராசிரியரை காலி செய்த மனைவி .. 10 ஆண்டுகள் கழித்து கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?
கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கார் ஏற்றி பேராசிரியர் கணவனை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனகசபை நகரை சேர்ந்தவர் சம்பத் என்பவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் கிரண் ரூபிணி. இவருக்கு 36 வயது ஆகிறது. இவருக்கும், கன்னியாகுமரி திருத்துவபுரத்தை சேர்ந்த ராஜேஷ்(40) என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. கிரண் ரூபிணியும், ராஜேசும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து வாழ பேராசிரியர் சம்பத் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய கிரண் ரூபிணி முடிவு செய்தார். அதன்படி முட்லூரை சேர்ந்த கார் டிரைவர் அமீர்பாஷா என்பவரின் உதவியுடன் கடந்த 30.8.2013 அன்று நள்ளிரவு 1 மணியளவில் சம்பத் மீது காரை ஏற்றி கொலை செய்தார்கள். பின்னர் இந்த கொலையை விபத்தாக மாற்றுவதற்கு 3 பேரும் முயற்சித்துள்ளார்கள்-
இதை அப்போது சிதம்பரம் பகுதி டிஎஸ்பியாக இருந்த ராஜாராம் (தற்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) தீவிர விசாரணை நடத்தி, இந்த சம்பவம் விபத்து இல்லை, கொலைதான் என்பதை தகுந்த சாட்சியங்களுடன் உறுதி செய்து கிரண் ரூபிணி, ராஜேஷ், அமீர்பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்து, தலைமறைவானார்கள். இதையடுத்து 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் 3 பேரையும் பிடிக்க கடலூர் எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டார். இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த டிரைவர் அமீர்பாஷாவை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைது செய்து, சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிரண் ரூபிணி, அவரது கள்ளக்காதலனுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பதுங்கி இருப்பது உறுதியானது. இதையடுத்து சிதம்பரம் தனிப்படை போலீசார் கோழிக்கோடுக்கு விரைந்து சென்று அங்கு ஒரு வீட்டில் வசித்து வந்த கிரண் ரூபிணி, கள்ளக்காதலன் ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர். சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் கிரண் ரூபிணி, அவரது கள்ளக்காதலன் ராஜேஷ் ஆகிய இருவரையும் சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications