இன்று கடலூர் செல்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.. ரூ. 387 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டம்
கடலூர்: கடலூரில் ரூ. 387 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக இன்று கடலூர் செல்லவுள்ள முதல்வர் முக ஸ்டாலின் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று பல்வேறு திட்டங்கள் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தும் வருகிறார். அந்த வகையில், கடலூரில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவடைந்த பணிகளை திறந்து வைக்கவும், 44 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் இன்று கடலூருக்குச் செல்கிறார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 11,716 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டா வழங்கப்பட உள்ளன. 84 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, 61 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, உள்ளிட்ட 12,226 பயனாளிகளுக்கு ரூ.164 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்படவுள்ளன.
அதேபோல, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 500 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் வழங்கப்படவுள்ளன. பழங்குடியினர் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 225 பயனாளிகளுக்கும், புனரமைக்கப்பட்ட ஊரகக் குடியிருப்புகள் திட்டத்தின் மூலம் 4,300 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.5,025 பயனாளிகளுக்கு ரூ.55.23 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 516 பயனாளிகளுக்கு ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 44,690 பயனாளிகளுக்கு ரூ. 387.66 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார். அந்த வகையில், முதலமைச்சரின் கிராமச் சாலைகளின் திட்டத்தின் கீழ் 110 சாலைப் பணிகள், 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் முதலிய 133 புதிய திட்டப் பணிகளுக்கு ரூ.120.81 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் 75 வகுப்பறைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். பல்வேறு துறைகள் சார்ந்த ரூ.384.41 கோடி மதிப்பீட்டிலான 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடலூரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, ரூ. 72. 67 கோடியில், 9 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், 61 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 4 சமுதாயக் கூடங்கள் முதலிய 225 முடிவுற்றத் திட்டப் பணிகள், வணிகவரி பதிவுத் துறை சார்பில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ரூ.479 கோடி மதிப்பீட்டில் குறிஞ்சிப்பாடி, வடலூர், திட்டக்குடி முதலிய பகுதிகளைச் சேர்ந்த 6,68,000 பொதுமக்களுக்கு தினமும் 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. ரூ.57.96 கோடியில் கட்டப்பட்டுள்ள 560 அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் ஆகியவை திறந்து வைக்கப்படவுள்ளன.
விழாவில், ரூ. 384.41 கோடி மதிப்பீட்டிலான 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. ரூ. 704.89 கோடி மதிப்பில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்கப்படவுள்ளது. அதேபோல, ரூ. 386.92 கோடி மதிப்பீட்டில் 44,689 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications