பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு.. சீமானுக்கு சிக்கல்? கடலூரில் 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு
கடலூர்: பெரியார் குறித்த அவதூறு பேச்சு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடலூர் மாவட்டம் வடலூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் அமைதியை குலைக்கும் விதமாக பேசுதல், கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் மற்றும் திராவிடம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சீமானுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் போராட்டம் செய்தனர். சீமானின் உருவப்படத்தை எதிர்த்து தபெதிக அமைப்பு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து திமுகவினரும், சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது கடலூர் மாவட்டம் வடலூரில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் அமைதியை குலைக்கும் விதமாக பேசுதல், கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.. தமிழ்த் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது.. தமிழ்த் தாய் 3,000 ஆண்டுகளாக என்ன படிக்க வைத்தது என்று கேட்டவர் தான் பெரியார். தமிழை சனியன் என்று கூறிய அதே பெரியார் எந்த மொழியில் அதை எழுதினார்.. அதையும் தமிழில் தானே எழுதினார்.
உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா?" என்று பேசினார். பெரியார் சொன்னதாக சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications