Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் தள்ளுபடி குட்நியூஸ் எப்போ? கடலூர் சங்கங்களில் அடமானம் வைக்க தடை?

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கூட்டுறவு சங்கங்களை பொறுத்தவரை குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால கடன்கள், பயிர் கடன்கள் மற்றும் பண்ணை சாரா கடன்களை வழங்குகின்றன. இதோடு, பயிர் காப்பீட்டு திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், அவசர தேவைகள், கல்வி, மருத்துவம், திருமண செலவுகள் போன்றவற்றிற்கும் நகை அடமானக் கடன்கள் மற்றும் தானிய ஈட்டுக்கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்ட செய்தி ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.

இன்றைய நிலையில், நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது மிகவும் எளிதாகிவிட்டது. அதிக வருமான சான்றுகள், ஐடி விவரங்கள் போன்றவை இல்லாமலே கூட நகை அடமானக் கடன் கிடைக்கிறது. இதன் மூலம் அவசர நிதி தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படுகின்றன.

Cooperative Banks Gold Jewelry Loan Mortgage Loan Cuddalore

கூட்டுறவு நகைக்கடன்

பொதுவான கடன்களுடன் ஒப்பிடுகையில், நகை அடமானக் கடனின் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் இதனை அதிகமாக விரும்புகின்றனர்.

இந்த வகை கடன் பெற்றதில் ஆரம்ப மூலமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி மற்றும் மாநில மற்றும் மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வங்கிகள் வழங்கும் நகைக்கடனுக்கு விதிமுறைகள் குறைவாகவும், வட்டி விகிதம் குறைவாகவும் இருப்பதால் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. வங்கிகள் வட்டி விகிதம் மாற்றப்பட்டாலும் மொத்த வட்டி சுமை குறைவாகவே இருக்கும்.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்

தங்கம் விலை தற்போது அதிகரித்துள்ள நிலையில், தங்கம் வாங்கும் போக்கு குறைந்திருந்தாலும், நகைகளை அடமானமாக வைத்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம், கிராமப்புற மக்களுக்கு அவசர நிதி தேவை பூர்த்தியாகவும், குறைந்த வட்டியில் கிடைக்கும் நகைக்கடன்கள் மிகவும் பிரபலமானதாகவும் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் கடலூர் மாவட்டத்தை பற்றின முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இங்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு நிதி சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இங்கு மொத்தம் 167 வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன.

கடலூர் மாவட்டம் - கடன் தள்ளுபடி

இவை விவசாய உற்பத்தியை அதிகரிப்பதில் மட்டும் அல்லாமல், சரியான நேரத்தில் பயிர் கடன்கள் வழங்குதல், வட்டி இல்லாத கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு நீட்டிப்பது போன்ற முறைகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக தேர்தல் வாக்குறுதியாக நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அதன்படி, வெற்றிபெற்ற பிறகு, 5 சவரன் அளவில் வேளாண் சங்கங்களில் அடமானமாக வைத்த நகைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த நேரத்தில் பலர் நன்கு பயனடைந்தனர்.

இந்த நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புதிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தள்ளுபடி அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக நகைக்கடன் தள்ளுபடி வாய்ப்பைப் பயன்படுத்தும் எண்ணத்தில், சிலர் வேளாண்துறைக்கு சம்பந்தமில்லாமலேயே நகைக்கடன் பெற முயற்சிக்க தொடங்கியுள்ளனர்.

நகைக் கடன் கிடையாதா?

இந்த சூழலில், கடலூர் மாவட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் வழங்க வேண்டாம் என்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளதாம்.. அதாவது, கூட்டுறவு சங்கங்களில் ஏற்கனவே உறுப்பினராக இருந்து நகைக்கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி நகை அடமானக் கடன் வழங்கப்படும். ஆனால் அங்கத்தினராக இல்லாதவர்கள் திடீரென உறுப்பினராகி, கணக்கு திறந்து நகைக்கடன் பெறுவது தடை செய்யப்பட்டு, புதிய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க மறுக்கப்படுகிறது.

இதன் விளைவாக, நகைக்கடன் பெறுவதற்காக சங்கங்களை சென்ற பலர் எதிர்பார்த்த உதவியை பெற முடியாமல், ஏமாற்றப்பட்டு திரும்புகிறார்களாம்..

எனவே பொதுமக்களுக்கு புதிய வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் வழங்கமாட்டது பற்றி தகவல் தெளிவாக கொடுக்க வேண்டும், அவசர நிதி தேவைகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும், கடன் பெறுவதை திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+