530 மில்லி கிராம் தங்கத்தில்.. மருத்துவர், காவலர்கள், தூய்மை பணியாளர்களின் வடிவம்!
கடலூர்: கொரோனா தடுப்பு பணியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சிதம்பரம்த்தில் பொற்கொல்லர் ஒருவர் 530 மில்லி கிராம் தங்கத்தில் கோரோனா விழிப்புணா்வு வடிவத்தை செய்து அசத்தியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் தீவிரம் குறித்தும், அதனை எதிர்கொள்வது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பொது நல நோக்கில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சிதம்பரம்த்தில் பொற்கொல்லர் ஒருவர் 530 மில்லி கிராம் தங்கத்தில் கரோனா விழிப்புணா்வு வடிவத்தை செய்துள்ளார்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவைச் சோ்ந்தவர் முத்துக்குமரன். பொற்கொல்லரான இவா் தங்கத்தால் மிகச் சிறிய வடிவங்களை செய்வதில் ஆா்வம் கொண்டவா். இவர், இதற்கு முன்பு தாஜ்மஹால், நடராஜா் கோயில் பொற்சபை, நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட வடிவங்களை தங்கத்தால் சிறிய வடிவில் செய்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 530 மில்லி கிராம் தங்கத்தில் கொரோனா வைரஸ், முகக் கவசம், மருத்துவா், காவலா், தூய்மைப் பாணியாளரின் வடிவங்கள் மற்றும் இந்திய நாட்டின் வடிவத்தை தயாரித்துள்ளாா். இவருக்கு பலரும் தற்போது தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications