கடலூர் ஆற்றங்கரையில் அரிய வெள்ளி நாணயம்.. 1000 வருட ரகசியம் உடைந்த ஆச்சரியம்.. தங்கத்தைவிட மதிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒரு பொக்கிஷம் கிடைத்திருக்கிறது.. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, அம்பலத்தாடி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியான நிலையில், கடலூர் மாவட்டத்திலும் தங்கத்தைவிட விலைமதிப்பற்ற அதிசயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழமையும், பெருமையும் வாய்ந்த பொக்கிஷம் என்ன தெரியுமா?
இன்றைய இளம் தலைமுறையினரிடம் குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தொல்லியல் விழிப்புணர்வு கொண்டுசெல்லப்பட்டு வருகிறது.. ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற வரலாற்று சான்றுகள் குறித்து, அவர்களுக்கு விளக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

வரலாற்று சின்னங்கள்
இதனால் நம்முடைய பழங்கால வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய சின்னங்களைப் பற்றி அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.. இதுபோன்ற விழிப்புணர்களால், தொல்லியல் ஆய்வுகள், வரலாற்று சான்றுகள், தொல்பொருட்களின் முக்கியத்துவம் , அவற்றைப் பாதுகாத்தல் போன்றவையும் பேணி காக்கப்படும்.
அதற்காகத்தான், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன், உலக மரபு வாரம் போன்ற சிறப்பு வார விழாக்கள், மற்றும் தொல்லியல் துறை ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளி
இதில் உலக மரபு வாரம் விழா என்பது ஒவ்வொரு வருடமும், நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான விழாவும் தற்போது நடந்துள்ளது.. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.. தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பார்வையில், இவர்கள் கள ஆய்வுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டபோது, கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல், டேவிட், ராஜ்குமார் ஆகியோர் ஒரு நாணயத்தை கண்டெடுத்தனர்..
அந்த நாணயத்தை கண்டு ஆச்சரியமுற்ற தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், அதுகுறித்து கூறியதாவது,
"ஸ்ரீராஜ ராஜ"
இந்த நாணயம் வெள்ளியால் ஆனது.. ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயமாகும்.. நாணயத்தின் எடை சுமார் 4.35 கிராம் உள்ளது.. நாணயத்தின
ஒருபக்கத்தில் தேவநாகரி எழுத்தில் "ஸ்ரீராஜ ராஜ" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், 985 முதல் 1014 வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜ சோழன்
காலத்திய நாணயம் இது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியபடி ஒருவர் நிற்கிறார்.. அவரது இடது பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவர் சங்கு ஏந்தி உட்கார்ந்திருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில்" ஸ்ரீராஜ ராஜ" என எழுதப்பட்டுள்ளது.
முதல்முறையாக வெள்ளி நாணயம்
இதே தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பில் பலமுறை ஆய்வுகள் நடந்துள்ளன. அவைகளில் ராஜராஜ சோழனின் 50க்கும் மேற்பட்ட செப்பு நாணயங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.. ஆனால் முதன்முறையாக இப்போதுதான் ராஜராஜ சோழனின் வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது..
இதுபோல தமிழகத்தில் சங்க கால மன்னர்கள் மட்டுமல்லாமல், சேரர், சோழர், பாண்டியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களும், தாமிரபரணி, வைகை, காவிரி போன்ற ஆற்றுப்படுகையில் ஆய்வாளர்களுக்கு கிடைத்துள்ளன" என்று பூரித்து கூறினார்.
-
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications