16 வயது சிறுமியை கடத்தி.. செல்லக்கிளி செய்த காரியம்.. தம்பதியை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
சிறுமியை 2-வதாக திருமணம் செய்த கணவன் உட்பட 2 பேர் கைதாகி உள்ளனர்
கடலூர்: 16 வயது சிறுமியை, கணவனுக்கு கல்யாணம் செய்து வைத்து.. நாசம் செய்துள்ளார் மனைவி.. சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தமைக்காக தம்பதி இருவரையும் போலீசார் போக்சோல் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
திட்டக்குடியை அடுத்த வையங்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதி அசோக்குமார் - செல்லக்கிளி. கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகிறது. 3 பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு ஆண் குழந்தை பிறக்கவே இல்லை. இதனால், கணவனைவிட செல்லக்கிளிக்கு அதிக கவலை வந்துவிட்டது.
அதனால், கணவனுக்கு 2வது கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்தார். இதை போய் கணவனிடம் சொன்னார்.. செல்லக்கிளி வாயிலிருந்தே இப்படி ஒரு ஆசை வெளியே வரவும், விடுவாரா என்ன? 2-வது கல்யாணத்துக்கு சரி என்று சொல்லிவிட்டார்.

அசோக்குமார்
அசோக்குமார் வேலை செய்யும் மில்லில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை நன்றாக தெரியும்.. நன்றாக பேசுவார்.. அந்த பெண்ணுக்கு 16 வயதுதான் ஆகிறது.. இந்த பழக்கத்தை வைத்து அந்த சிறுமியை கணவனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்று செல்லக்கிளி முடிவு செய்துள்ளார்.

சிறுமி
விஷயத்தை கணவனிடம் சொல்ல, சிறுமியிடம் நெருங்கி பேச ஆரம்பித்துவிட்டார் அவர். இருவரும் சேர்ந்து, 2-வது கல்யாணம் பற்றி சிறுமியிடம் பேசி, வசதியான வாழ்க்கையை வாழலாம் என்று ஆசை ஆசையாக பேசவும், சிறுமியும் அதை நம்பி நம்பி உள்ளாள்.

செல்லக்கிளி
போன வியாழக்கிழமை, ஓகலூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு போகிறோம் என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு, சிறுமியை கணவன், மனைவி அழைத்து சென்றுள்ளனர். அங்கு கணவனை வைத்து சிறுமிக்கு தாலி கட்ட சொன்னார் செல்லக்கிளி.. கல்யாணம் முடிந்தது.. தெரிந்தவர் வீட்டில் கணவனையும், சிறுமியையும் தங்க வைத்துள்ளார். அந்த 2 நாளுமே சிறுமியை கொடுமையாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி உள்ளார் கணவன்.

சந்தேகம்
கோயிலுக்கு போன மகளை காணோமே என்று செல்லக்கிளியிடம் பெற்றோர் கேட்க, முன்னுக்குபின் முரணாக பதில் சொல்லி உள்ளார். அதனால் சந்தேகமடைந்து, போலீசில் புகார் தந்தனர். இதையடுத்துதான் விசாரணை ஆரம்பமானது. மேற்கண்ட விவரங்கள் எல்லாம் விசாரணையில் தெரியவந்தது.கட்டாய திருமணம், கடத்தி சென்றது, சிறுமியை நாசம் செய்தது போன்ற குற்றத்துக்காக தம்பதி போக்சோவில் கைதாகி உள்ளனர். ஒன்றும் அறியாத அந்த 3 பெண் குழந்தைகள் அப்பா, அம்மா இன்றி தவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
