தூக்கில் தொங்கிய பிரியங்கா.. கீழே குழந்தையின் சடலம்.. கொலையா தற்கொலையா.. கலங்கி போன கடலூர்!
கடலூர் அருகே தாயும், குழந்தையும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்
கடலூர்: பிரியங்கா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. அவரது குழந்தை அவருக்கு கீழே சடலமாக கிடந்தது.. தாயும் - குழந்தையும் எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை.. இது கொலையா? தற்கொலையா என்றும் தெரியவில்லை.. கடலூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொளக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன்.. இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

ஆட்கொண்ட நத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணை இவர் காதலித்தார்.. பிறகு 2 வருஷத்துக்கு முன்பு அவரையே கல்யாணமும் செய்தார்.. ஒரு வயதில் இவர்களுக்கு மீன லோச்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.
அந்த குழந்தையின் பிறந்த நாள் தற்போது சிறப்பாக கொண்டாடவும் தம்பதியினர் பிளான் செய்து வந்தனர்.. இந்நிலையில், தாயும், குழந்தையும் இறந்துவிட்டனர்.. இவர்கள் எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை.
பிரியங்கா தூக்கில் தொங்கி கொண்டு இருந்திருக்கிறார்.. குழந்தை மீனலோச்சினி கீழே இறந்த நிலையில் கிடந்தாள்.. இப்படித்தான் இவர்களை சடலமாக அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.
அவர்கள் விரைந்து வந்து தாய் - மகள் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. உண்மையிலேயே இந்த சம்பவம் போலீசாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலையா என தெரியவில்லை.
பர்த்டே கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் பிரியங்கா ஆர்வமாக செய்து வந்த நிலையில்,இந்த மர்ம மரணம் சந்தேகங்களை எழுப்பி உள்ளது.. எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியவரும்.. போலீசாரும் விசாரணையை கிண்டி எடுத்து வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications