"வர்றது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே".. கரெக்ட்டா தாலி கட்டும் நேரத்தில்.. வெலவெலத்த போலீஸ்காரர்
கடலூர்: தாலி கட்ட போகும் நேரத்தில் கரெக்ட்டாக வந்துவிட்டார் அந்த பெண்.. அதற்கு பிறகு மாப்பிள்ளை முகத்தை பார்க்கணுமே.. கதிகலங்கி ஓடிய சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி என்ற பகுதி அமைந்துள்ளது... இங்கு வசித்து வரும் ராம்குமார்.. 30 வயதாகிறது.. திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் சபீதா.. ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர்.. கடந்த 2019-ம் ஆண்டு இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

மணவாழ்க்கை
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களின் திருமணவாழ்க்கையில், திடீரென புயல் வீச துவங்கிவிட்டது.. கருத்து வேறுபாடு காரணமாக 2 பேருக்குமே அடிக்கடி தகராறு வந்தநிலையில், கடந்த சில மாதங்களாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்... ஆனால் விவாகரத்து எதுவும் செய்யவில்லை.. இந்நிலையில், ராம்குமார் வேலை பார்த்துவரும் பேரளம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்யா என்பவர் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.. இவர், மயிலாடுதுறை மாவட்டம் திருவேற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்.. ஒரே ஸ்டேஷனில் போலீஸ்காரர்கள் என்பதால், இருவருமே நெருங்கி பழகியுள்ளனர்.. அதுவே காதலாக மாறிவிட்டது..

வெறுப்பு சபிதா
ரம்யாவுடன் பழக துவங்கியதுமே, மனைவி சபிதாவை அதிகமாக வெறுக்க துவங்கினார்.. முழுமையாக அவரை பிரியவும் நினைத்த ராம்குமார்.. ஆனால், விவாகரத்து பெறாமல், ரம்யாவை திருமணம் செய்ய முடியாது என்று யோசித்தவர், போலியாக விவாகரத்தை பெற முயன்றார்.. அதாவது, மனைவி சபிதா தன் வீட்டில் இருக்கும்போதே அவரது பெற்றோர் வீட்டில் உள்ளதை போன்று, ஆலப்பாக்கம் அட்ரஸூக்கு விவாகரத்துக்கான நோட்டீஸை அனுப்பியுள்ளார்... ஆனால், இந்த விஷயம் தெரியாமலேயே சபிதா, கணவர்மீது வழக்கமான கோபத்துடன், தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு நிஜமாகவே சென்றுவிட்டார்..

திருமணம்
இதையே சாக்காக பயன்படுத்தி கொண்டு, சபிதாவுக்கு தெரியாமலேயே மயிலாடுதுறை கோர்ட்டில் ஒருதலைபட்ச தீர்ப்பாக விவாகரத்து பெற்றுவிட்டார் ராஜ்குமார். இப்போது, தன்னுடன் பணிபுரியும் ரம்யாவை கல்யாணம் செய்ய ப்ளான் போட்டார்.. அதன்படி சம்பவத்தன்று திருவெண்காடு கிராமத்தில் உள்ள கோயிலில் உறவினர் முன்னிலையில் திருமண ஏற்பாடுகள் செய்தார் ராம்குமார்.. அதற்குள் இந்த விஷயம் சபிதாவின் காதுகளுக்கு எட்டிவிட்டது.. இதனால், உடனடியாக தன்னுடைய பெற்றோர் உறவினருடன் கோயிலுக்குள்ளேயே நுழைந்த சபிதா, திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்..

கரெக்ட்டா தாலி
கரெக்ட்டாக தாலி கட்டும் நேரத்தில் கல்யாணத்தை தடுத்து நிறுத்தினார். திடீரென சபிதாவை கோயிலுக்குள் பார்த்ததுமே ராஜ்குமாருக்கு வெலவெலத்து போய்விட்டது.. சபிதாவுக்கு எப்படி விஷயம் தெரிந்தது என்று குழம்பி போய் நின்றார்.. அதற்கு மேல் அங்கு நின்றால் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்த ராஜ்குமார், அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார்.. அவரை பார்த்ததுமே, மணப்பெண்ணுக்கும் பதற்றம் ஒட்டிக்கொண்டது.. எல்லாருமே அங்கே கூடியிருக்கும்போது, திடீரென தப்பித்து ஓடினார்.. ஓடும்போது, ரம்யாவையும் தன் கையோடு இழுத்துக் கொண்டு ஓடினார்.. இவர்களை விரட்டிக்கொண்டே ஒரு கும்பல் பின்னாடியே சென்றது.

மிஸ்ஸிங் ஜோடி
ஆனால், அதற்குள் பக்கத்தில் இருந்து திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் மணமக்கள் தஞ்சமடைந்தனர்.. பதறிப்போய் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவர்களிடம் அங்கிருந்த போலீசார் விசாரித்தபோதுதான், இவர்கள் 2 பேருமே போலீஸ்காரர்கள் என்பது தெரியவந்தது.. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளிக்க அங்கிருந்த போலீஸ்காரர்கள் அறிவுறுத்தவும், அதன்படியே எஸ்பியிடம் புகார் தந்தார் ராஜ்குமார்.. அதேபோல, தன்னுடைய கணவர் மோசடியாக விவகாரத்து பெற்று வேறொரு திருமணம் செய்ய முயன்றதாக சபிதாவும் எஸ்பியிடம் புகார் அளித்தார்... இதையடுத்து, இரு தரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications