கடலூர் பஸ் ஸ்டாண்டில் ஒதுங்கிய பெண்கள்.. அதென்ன கையில்? பாலினம் கண்டறியும் கருவி".. விழித்த வேப்பூர்
கடலூர்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கெனவே பிரத்யேகமாக புரோக்கர்களும் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது கடலூரில் என்ன நடந்தது தெரியுமா? வேப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்தவர்கள் யார்?
தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்வதாகவும், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை அழைத்து சென்று, வீட்டில் வைத்து ஸ்கேன் செய்து, பாலினத்தை கண்டறிந்து கூறுவதாகவும், தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்திக்கு சில மாதங்களுக்கு முன்பு, ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சேலம் மாவட்டம், ஆத்தூர், பஸ் ஸ்டாண்ட் அருகில், மேரி என்பவர் வீட்டில், அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இறுதியில் மேரி உட்பட பலரும் கைதாகியிருந்தனர்.
ஸ்கேன் சென்டருக்கு சீல்
கடந்த மாதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் செய்து குழந்தை ஆணா, பெண்ணா என்பதை திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சில கிளினிக்குகளில் கூறுவதாகவும், அதற்காக பணம் பெறுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கவும், மேற்கண்ட பகுதிகளில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது-
இறுதியில், வீராணம் கோழிப்பண்ணை பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்த "பசுபதி ஸ்கேன் மையம்" என்ற கிளினிக்கில், ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், செவிலியர்கள் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்திருந்ததுடன், ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேப்பூர் பஸ் ஸ்டாண்டு
இந்நிலையில், கடலூர் மாவட்டத்திலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. வேப்பூர் பகுதியில் ஸ்கேன் இயந்திரம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து சென்றது.
இந்த புகாரின்பேரில், சுகாதாரத் துறை மாவட்ட அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வேப்பூரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பூர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த காரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.. அப்போது 3 பேர், பாலினம் கண்டறியும் கருவியுடன் உட்கார்ந்திருந்தனர்... இதையடுத்து, வேப்பூர் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர்.
டோர் டூ டோர் செக்கிங்
போலீசார் நடத்திய விசாரணையில், ஆவட்டி அடுத்த மா.புடையூரை சேர்ந்த தென்னரசு, 32, திட்டக்குடி பெரியார் நகர் தீனதயாளன் மனைவி அஜிரபீ, 32; சேலம் மாவட்டம், குமாரபாளையம் ஜெயவேல் மனைவி எல்லம்மாள், 32என்பதும் தெரியவந்தது..
பாலினம் கண்டறிய வேண்டியவர்கள், இவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டால், அவர்களின் வீட்டிற்கே சென்று இயந்திரம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்வார்களாம்.. அதாவது கையில் மிஷினுடனேயே கர்ப்பிணி வீடுகளுக்கு செல்வார்களாம்.. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, தென்னரசு உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
-
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications