குரூப் 1-ல் முதலிடம்! கடலூர் விவசாயி மகள் கதிர்செல்விக்கு சொந்த கிராம மக்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி
கடலூர்: நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கதிர்செல்வி. சாதாரண ஏழை விவசாயியின் மகளான கதிர்செல்விக்கு அந்த கிராம மக்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாகத்துடன் வரவேற்று மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் வாழக்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். விவசாயி. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு கதிர்செல்வி என்ற 27 வயதில் பெண்ணும், ஒரு மகனும் இருக்கின்றனர். கதிர்செல்வி சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் உள்ள சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மை பட்டப்படிப்பை முடித்தார்.

மாநில அளவில் முதலிடம்
தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் கதிர்செல்வி வெற்றி பெற்றார். எனினும் பணிக்கு செல்லாமல் இருந்த கதிர் செல்வி குரூப் 1 தேர்வு தான் இலக்கு என்று அதற்காக கடுமையாக முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை கதிர்செல்வியும் எழுதியிருந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கதிர்செல்வி மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார்.
மாலை, பொன்னாடை அணிவித்து பாராட்டு
கதிர்செல்வி மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை புரிந்ததால், அவரது பெற்றோர் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவரது கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார பொதுமக்களும் மாணவியை பாராட்டினர். இந்த நிலையில் இன்று சொந்த ஊருக்கு வந்த மாணவியை ஊர் மக்கள் ஒன்றுகூடி வரவேற்றனர். பொன்னாடை அணிவித்தும், மாலைகள் அணிவித்தும் பாராட்டு தெரிவித்தனர்.
சாதாரண விவசாயியின் மகள் மாநில அளவில் முதலிடம் பிடித்ததை ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாணவிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டிற்கு வந்த மாணவிக்கு பெற்றோரும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மாணவி தான் எப்படி படித்தேன் என்றும், இளைஞர்கள் எப்படி படிக்க வேண்டும் என்றும் சில அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறியதாவது:-

தேர்வு எழுதிகொண்டே இருந்தேன்
என் பெயர் கே கதிர்செல்வி. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் உள்ள வாழக்கொல்லை கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். நான் குரூப் 1 2025 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று பாஸ் செய்திருக்கிறேன். இதற்கு எப்படி நான் பிரிப்பேர் செய்தேன் என்றால், முதலில் நான் யூபிஎஸ்சி தேர்வுக்கு தான் படித்தேன். ஆனால் அதனை பெரியதாக, ரொம்ப கடினம் என்று நினைத்ததால் மீண்டும் நான் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன்.
அதற்கு பிறகு நான் தொடர்ந்து டெஸ்ட் எழுதிக்கொண்டே இருந்தேன். என்னை நானே நிறைய இம்ப்ரூவ்மெண்ட் செய்துகொண்டே இருந்தேன். அப்படியே தொடர்ந்து செய்துகொண்டே தான் இந்த தேர்வை நான் க்ளீயர் செய்தேன். இதனால் தான் நான் அதிக மதிப்பெண் பெற்றேன். நேர்முகத்தேர்விலும் பர்ஸ்ட் கிளப் வாங்கினேன். இதனால் தான் நானும் மாநில அளவில் இப்போது முதல் இடம் பிடித்தேன்.
கடின உழைப்பு, உறுதியோடு
கடின உழைப்பு மற்றும் உறுதியோடு படித்ததால் தான். ஹார்ட்வொர்க் பிளஸ் டெடிகேஷனோடு படியுங்கள் என்று தான் இப்போது படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நான் கொடுக்கும் மோட்டிவேஷன். படிக்க முடியாது கஷ்டம் என்று நினைக்காமல், தோல்வியடைந்துவிட்டோம் என்று நினைக்காமல் தொடர்ந்து கடின உழைப்பு மற்றும் அக்கறையோடு படித்தால் வெற்றி பெறலாம். நானும் குரூப் 2 தேர்வு எழுதினேன். ஆனால் அதில் பாஸ் ஆகவில்லை. அதற்காக நான் அப்படியே விடவில்லை.
மீண்டும் எழுதினேன். அப்படியே நான் படிப்பதை விட்டிருந்தால் இப்போது என்னால் முதல் மதிப்பெண் பெற்றிருக்க முடியாது. நம்மால் கட்டாயம் முடியும் என்றும், தோல்வியை ஒரு படிக்கட்டு என்றும் தான் நினைக்க வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட். என்னுடைய பெற்றோர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தனர். என் தந்தைக்கு சின்ன வயதில் இருந்தே பாத்துக்கொண்டு இருக்கிறார். அம்மாவும் என்னை வீட்டில் வேலையே பார்க்க சொல்ல மாட்டார். என்னுடைய தம்பியும் பணம் கொடுத்து உதவினான். இவ்வாறு அவர் கூறினார்.
யாராலும் எட்ட முடியும்
குரூப் 1 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாராண கிராமத்தை சேர்ந்த விவாசயியின் மகள் முதலிடம் பெற்று அசத்தியிருப்பது அரசு தேர்வுகள் எழுதும் தேர்வர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி என்னும் ஒற்றை ஆயுதத்தை பயன்படுத்தி எவ்வளவு பெரிய உயரத்தையும் யாராலும் எட்ட முடியும் என்பதற்கு சான்றாக இவரது வெற்றி அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பெரிய நகரங்களில் வசதி மிக்க பின்புலம் கொண்டவர்கள் என்று இல்லை.. எந்த நிலையில் இருந்தாலும் கடினமாக உழைத்தால் அரசு நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயரிய பதவியை எட்ட முடியும் என்பதை கதிர்செல்வி மெய்பித்து காட்டியுள்ளார் என்று கல்வியாளர்ள் பலரும் கூறியுள்ளனர். குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்ற கதிர்செல்விக்கு பல்வேறு தரப்பினரும் பாரட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13- ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதினர். இதில், அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி வெளியானது.
190 பேர் வெற்றி பெற்றதாக
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1,888 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10, 11, 12 மற்றும் 13-ந்தேதிகளில் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 14-ந்தேதி வெளியிட்டது. 1,888 பேர் எழுதியதில், 190 பேர் வெற்றி பெற்று இருப்பதாக அப்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
அதன்படி, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 190 பேருக்கு கடந்த 7- ம் தேதி நேர்முகத் தேர்வு தொடங்கியது. கடந்த 3 நாட்களாக நடந்த நேர்முகத் தேர்வு 9 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு முடிந்த நிலையில் 189 பேரின் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய தேர்வர்களின் ஒருங்கிணைந்த தற்காலிக மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட்டது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications