கடலூரில் கடல் நாகராஜன் வீட்டு பெட்ரூமில் மெத்தையில் யார் யாருங்க.. "முருகா, என்கிட்டயே வந்துட்டியா"

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நல்ல பாம்பு கடித்தால், விஷம் உடலுக்குள் சென்று பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும், பக்கவாதம், இரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் திசு சேதத்தை ஏற்படுத்தலாம். சில நேரங்களில், கடித்த ஒரு மணி நேரத்திற்குள் மரணம் கூட ஏற்படலாம், ஏனெனில் மூச்சு மண்டலம் செயலிழந்துவிடுவதால், இத்தகைய ஆபத்துக்கள் நடக்கும். ஆனால், கடலூரில் நடந்த ஒரு சம்பவம் காண்போரை திகைக்க வைத்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் கடலூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.. கடலூர் முதுநகர் அருகே உள்ளது வண்டிப்பாளையம் என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் ஒருவரின் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது..

Cuddalore Kadal Nagarajan Snake

மறைந்திருந்த பாம்பு

இதை பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர் உடனே பாம்பு பிடிக்கும் வீரரான செல்லாவுக்கு தகவல் தந்துள்ளார்.. சிறிது நேரத்தில் பாம்பு பிடிவீரர் செல்லா, அந்த வீட்டுக்கு விரைந்து சென்று பாம்பை தேடினார்... அப்போது அங்கிருந்த செங்கற்களுக்கு நடுவில் பாம்பு மறைந்திருந்தது தெரிந்தது. உடனே மறைந்திருந்த அந்த பாம்பை செல்வா லாவகமாக பிடித்தார்.. அந்த பாம்பு சுமார் 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

பிறகு, அந்த பாம்பை அடைத்து கொண்டு போவதற்காக, வீட்டின் உரிமையாளரிடம் ஒரு பாட்டில் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.

பாட்டில் கிடைக்குமா

பாட்டில் ஏதாவது தேடி தருவார் என்று பார்த்தால், அந்த வீட்டின் உரிமையாளர் திடீரென ஒரு தாம்பூல தட்டை கொண்டு வந்தார்.. அதில், கற்பூரம் ஏற்றி பாம்புக்கு பூஜை செய்ய துவங்கிவிட்டார்.. சிறிது நேரம் கழித்து பாட்டில் ஒன்றை கொண்டு வந்தார்.

Cuddalore Kadal Nagarajan Snake

அந்த பாட்டிலுக்குள் பாம்பை செல்வா அடைத்தார்.. அப்போதும்கூட, அந்த குடும்பத்தினர் நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்துள்ளது, எனவே அது சாமி என சொல்லி, டப்பாவில் அடைத்திருந்த பாம்புக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். வீட்டுக்குள் நுழைந்த பாம்புக்கு, உரிமையாளர் திடீரென பூஜை செய்த சம்பவம் கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் வீட்டில் படமெடுத்த பாம்பை சூடம் ஏற்றி வழிபட்டு அனுப்பி வைத்த குடும்பத்தினர் வீடியோ காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது..

படுக்கையறையில் பாம்பு

இந்நிலையில், இதே கடலூரில் ஒரு வீட்டில் பாம்பு நுழைந்துள்ளது.. அந்த வீட்டின் படுக்கையறையிலேயே பாம்பு கிடந்துள்ளது, பரபரப்பை தந்துள்ளது.

கடலூர் ஆல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கடல் நாகராஜன்.. இவர் நேற்றிரவு தன்னுடைய படுக்கையில் தூங்க சென்றுள்ளார்.. அப்போது தலையணைக்கு கீழ், ஏதோ நெளிவதை போல தெரிந்துள்ளது.. உடனே கடல் நாகராஜனின் மனைவி, பாம்பு பாம்பு என்று அலறிக்கொண்டே ஓடினார்.

படுக்கையில் நெளிந்து கொண்டிருந்த பாம்பிடம் நாகராஜனின் மனைவி, "நான் உனக்கு பூஜை செய்தேனே.. அதனால்தான் படுக்கையறைக்கே வந்துவிட்டாயா முருகா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்..

Cuddalore Kadal Nagarajan Snake

இதற்கு நடுவில் கடல் நாகராஜன், வன ஆர்வலர்களுக்கு தகவல் தந்து வரவழைத்தார்.. விரைந்துவந்த வன ஆர்வலர், பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் பத்திரமாக அடைத்தனர்.. பிறகு பாதுகாப்பாக கொண்டு சென்று காப்புக் காட்டில் விட்டார்..

முருகா, வந்துட்டியா

நாகராஜன் வீட்டுக்குள் பாம்பு நுழைந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், பாம்பை பார்க்க வீட்டிற்குள் திரண்டு வந்தனர்..

"முருகா, வந்துட்டியா.. நான் இன்னைக்கு பூஜை பண்ணதுமே வந்துட்டியா? ஏன்டா முருகா... வந்துட்டியா என்கிட்ட? நீ சக்தியுள்ள முருகன்" என்று நாகராஜனின் , பாம்பை பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி கேட்ட வீடியோதான், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+