கடலூரில் சுற்றிய லாட்டரி டிக்கெட்.. லட்சம் லட்சமாய் கொட்டிய பணம்! பாஜக பிரபலமா இப்படி? சிக்கிட்டாரே
கடலூர்: கடலூரில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக சமீப நாட்களாகவே புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.. மீண்டும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கடலூரில் படுவிறுவிறுப்பாக நடப்பதாகவும் இதனால் ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, உடனடியாக லாட்டரி சீட்டு விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழக அரசு கடந்த 2003ல் தடையை விதித்தது. சுரண்டல் லாட்டரியால் அதாவது ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏராளமான குடும்பங்கள் பணத்தை இழந்தன.. இதனால் இந்த குடும்பங்களை காப்பதற்காகவே தமிழக அரசு அப்படியொரு நடவடிக்கையை எடுத்தது.

எனினும், கேரளா உள்ளிட்ட வடமாநிலங்களில் லாட்டரி சீட்டு இன்னும் தடை செய்யப்படவில்லை. சில வருடங்கள் அமைதி காத்த லாட்டரி உரிமையாளர்கள், இப்போது மீண்டும் தீவிரமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள லாட்டரி சீட்டுக்களை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆசைப்படும் தொழிலாளர்கள்
தினமும், காலை முதல் மதியம் வரை, குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே, ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆட்டோ டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் இப்படியானவர்களை மட்டுமே குறிவைத்து விற்பனை நடக்கிறது.
நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி, தினமும் நுாற்றுக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும், வடமாநில லாட்டரி சீட்டுகள் கம்ப்யூட்டர் மூலம் விற்பதாகவும் சிலர் இந்த விற்பனையில் ஈடுபட்டு, . 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
நாள்தோறும் ஓடி ஓடி உழைத்து களைக்கும் தொழிலாளிகள், நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதோ? என்று ஏக்கத்தில் லாட்டரி வாங்குகிறார்கள்.. இதற்காக சம்பளத்தில் பெரும் தொகையையும் செலவழிக்க நேரிடுகிறது.
ஆன்லைனில் லாட்டரி
அந்தவகையில், கடலூர் மாவட்டத்திலும் லாட்டரி விற்பனை தலைதூக்கியிருப்பதாக கூறப்படுகிறது.. கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பகுதிகளிலும் லாட்டரி விற்பனை நடக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, சிலர், கேரளாவுக்கு வேலை செய்வதாக வீட்டில் சொல்லி, இதே லாட்டரி விற்பனையில் லாபம் பார்த்து வருகிறார்களாம்.
எனவே, இந்த லாட்டரி விற்பனையை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீப காலமாகவே கோரிக்கைகள் வலுத்து வருகின்றன..
கடலூரில் லாட்டரி
இந்நிலையில், இதே கடலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அதாவது அங்குள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.. உடனே புதுநகர் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜெயராமன் என்ற 62 வயது நபர் மீது சந்தேகம் வலுத்தது.. அவரை பிடித்து விசாரித்தபோது, ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பவர் என்பதும் இவருக்கு அவரது மனைவி மல்லிகா (வயது 55), மகன் சாரதி, புதுப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 44) ஆகியோர் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது..
பிரபல பாஜக பிரமுகர்
இதையடுத்து 4 பேரையுமே போலீசார் விசாரித்து, கைது செய்தனர்.. அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ. 22 லட்சத்து 94 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில், கைதாகியிருக்கும் ஜெயராமன் மீது ஏற்கனவே 18 லாட்டரி வழக்குகளும், பிரகாஷ் மீது 3 லாட்டரி வழக்குகளும் இருக்கிறதாம்..
அதுமட்டுமல்ல, பிரகாஷ் அந்த பகுதியில் பிரபல பாஜக பிரமுகர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதாவது கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வருகிறாராம்.. தற்போது மனைவி, மகனுடன் இந்த பாஜக பிரமுகர் கைதாகி உள்ளது, கடலூரில் பரபரப்பை தந்து வருகிறது.
கடலூரில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக சமீப நாட்களாகவே புகார்கள் எழுகின்றன. மீண்டும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கடலூரில் படு விறுவிறுப்பாக நடப்பதாகவும் இதனால் ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, உடனடியாக லாட்டரி சீட்டு விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!











Click it and Unblock the Notifications