கடலூர் மீனா.. ஜன்னலில் பார்த்து அதிர்ந்த குடும்பம்.. ஒரே புடவையில் அதிர வைத்த தம்பதி.. அடப்பாவமே
கடலூர்: நீண்ட நேரமாக கதவை திறக்காததால், சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர் குடும்பத்தினர்.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவத்தை நேரில் கண்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது காட்டாண்டிக்குப்பம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ரமேஷ் என்கிற குமரவேல்.. இவருக்கு 32 வயதாகிறது.. இவர் பால் வண்டியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். மனைவி பெயர் மீனா. 20 வயதாகிறது.

கூட்டுக்குடும்பம்: குமரவேல் பெற்றோர் உட்பட இவர்கள் அனைவருமே ஒன்றாக, ஒரே வீட்டில் வேலை வசித்து வருகிறார்கள்.. பெற்றோர் கீழ்ப்பகுதியில் குடியிருக்க, மாடியில் குமரவேல் தம்பதியினர் தங்கி வருகிறார்கள்.
இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது.. இன்னும் குழந்தைகள் இல்லை.. இந்நிலையில், நேற்றிரவு வேலை முடித்துவிட்டு, 10 மணிக்கு வீட்டுக்கு வந்திருக்கிறார் குமரவேல்.. அதற்கு பிறகு தம்பதி இருவருமே தூங்க சென்றுவிட்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் குமரவேலும், மீனாவும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை..
தம்பதி: இதனால் அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்திருக்கிறார்கள.. வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது.. அதனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும், யாருமே கதவை திறக்கவில்லை. இதனால், ஜன்னல் வழியாக பார்த்தபோது, கணவன், மனைவி இருவருமே தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அலறினார்கள். இருவருமே ஒரே புடவையில் தூக்கில் சடலமாக கிடந்தனர்.
பிறகு, இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தந்ததையடுத்து, விரைந்து வந்தனர். தம்பதியினரின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை..
துயரம்: அன்றைய தினம் எப்போதும்போல், வீட்டிலுள்ளவர்களிடம் இயல்பாகவே பேசினார்களாம்.. திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்களே என்று குடும்பத்தினர் கதறி கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. குழந்தை இல்லாத ஏக்கத்தால் தம்பதிகள் தவித்து வந்த நிலையில், இப்படி முடிவை ஒன்றாக சேர்ந்து எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications