கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொந்தக்கார பையன் "தொட்டு டான்ஸ் ஆடியதால்" திருமணம் நிற்கவில்லை! விஷயமே வேற! கடலூர் மணமகள் புகார்

Google Oneindia Tamil News

கடலூர்: வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் ஆட்டம் போட்டதால் மாப்பிள்ளை தாக்கியதாக கூறி மாப்பிள்ளையை மாற்றிய விவகாரத்தில் நிச்சயிக்கப்பட்ட மணமகன், வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    சொந்தக்கார பையன் தொட்டு டான்ஸ் ஆடியதால் திருமணம் நிற்கவில்லை! விஷயமே வேற! கடலூர் மணமகள் புகார்

    கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரைச் சேர்ந்த ஸ்ரீதருக்கும் பண்ருட்டியைச் சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்து திருமணம் நாள் குறிக்கப்பட்டது.

    "ஏன் எல்லாரும் உன் மேல கை போடறாங்க".. கொந்தளித்த மாப்பிள்ளை.. பண்ருட்டி திருமணத்தில் நடந்தது என்ன?

    அதன்பேரில் நேற்று முன்தினம் காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது டிஜே இசை நிகழ்ச்சிக்கு மணப்பெண் ஜெய சந்தியா உறவினர்களுடன் நடனம் ஆடினார்.

    மணப்பெண்

    மணப்பெண்

    அப்போது உறவுக்காரர் ஒருவர் மணப்பெண் தோளில் கை போட்டு ஆடினார். இதனால் மாப்பிள்ளை கோபமடைந்தார். ஓங்கி மணப்பெண் கன்னத்தில் அறைந்தார். இதனால் திருமண வீடே பெரும் பரபரப்புக்குள்ளானது. மாப்பிள்ளை அடித்ததாக கூறி, மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். அதே முகூர்த்தத்தில், உறவினர், அதாவது முறைமாமாவுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் ஜெயசந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் ஸ்ரீதர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜெயசந்தியா வீட்டார் தனக்கு 7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என புகார் கொடுத்திருந்தார்.

     குறித்த நேரத்தில்

    குறித்த நேரத்தில்

    இந்நிலையில் இன்று திடீரென மணப்பெண் ஜெயசந்தியா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், கூறுகையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகன் ஸ்ரீதர் குடிபோதையில் தன்னை தாக்கியதாகவும் கார் மற்றும் 50 பவுன் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே மறுநாள் காலை குறித்த முகூர்த்த நேரத்தில் தாலி கட்டுவேன் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

     கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    என்னை தவிர வேறு யார் உன்னை கல்யாணம் செய்வார்கள் எனக் கூறி ஸ்ரீதர் தன்னை தாக்கியதாக ஜெயசந்தியா புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

     நீதி கிடைக்கும்

    நீதி கிடைக்கும்

    இதில் உடன்பாடு ஏற்படத்ததால் ஜெயசந்தியா தாம் நீதிமன்றத்தை நாடி தனக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதாக செய்தியாளர்களை சந்தித்தபோது திட்டவட்டமாக தெரிவித்தார்.

    English summary
    Cuddalore newly married girl accuses the bridegroom demands 50 sovereign of gold as dowry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X