கலைச்செல்வியுடன் ஊர் சுற்றிய தமிழ்ச் செல்வன்.. கர்ப்பமானவருக்கு டிமிக்கி.. நடந்தது சுவாரஸ்ய சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: காதலித்து கர்ப்பம் ஆக்கிய காதலன் கை பிடிக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து போலீஸார் காவல் நிலையத்தின் அருகிலேயே திருமணம் செய்து வைத்த சுவாரஸ்ய சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

Recommended Video

    கலைச்செல்வியுடன் ஊர் சுற்றிய தமிழ்ச் செல்வன்.. கர்ப்பமானவருக்கு டிமிக்கி.. நடந்தது சுவாரஸ்ய சம்பவம்!

    கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (21) கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(24) இவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கலைச்செல்வி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி தமிழ்ச்செல்வனை கலைச்செல்வி வலியுறுத்தி வந்த நிலையில் அவர் அதற்கு முடியாது என்று கூறி வந்துள்ளார்.

    6 மாத கர்ப்பிணி

    6 மாத கர்ப்பிணி

    இந்த நிலையில் கலைச்செல்வி ஆறு மாத கர்ப்பமானார். பின்னர் வீட்டில் விஷயம் தெரிந்து விட வீட்டில் உள்ளவர்கள் தமிழ்ச்செல்வன் வீட்டிற்குச் சென்று திருமணம் குறித்து பேசியுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்ய முடியாது என தெரிவித்து விட்டனர்.

    மகளிர் காவல் நிலையம்

    மகளிர் காவல் நிலையம்

    வேறு வழியின்றி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகினார் கலைச்செல்வி. இந்த நிலையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகேஸ்வரியும், உதவி ஆய்வாளர் எழிலரசியும் இந்த விவகாரம் குறித்து தமிழ்ச்செல்வனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து நேரில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஆதாரங்கள்

    ஆதாரங்கள்

    முதலில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத தமிழ்ச்செல்வன் பின்னர் கலைச்செல்வி காட்டிய அனைத்து ஆதாரங்களையும் பார்த்து பின்னர் "நான்தான் கலைச்செல்வியின் கர்ப்பத்திற்கு காரணம்" என ஒப்புக்கொண்டார். மேலும் நான் கலைச்செல்வியை திருமணம் செய்ய தயாராக உள்ளதாகவும் தங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    மேஜர்

    மேஜர்

    இதைத் தொடர்ந்து இரண்டு பேரும் மேஜர் என்பதால் காவல் நிலைய வளாகத்திலேயே இருந்த கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர் காவலர்கள். உடனடியாக மாப்பிள்ளைக்கு புது வேட்டி சட்டை, பெண்ணுக்கு புடவை மாலை மற்றும் தாலி உள்ளிட்டவை காவலர்களால் வாங்கி வரப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலிலேயே உடனடியாக திருமணம் நடத்தப்பட்டது.

    தாலி

    தாலி

    இந்த திருமணத்தை கலைச்செல்வியின் பெற்றோர் மற்றும் காவலர்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர்கள் தாலி கட்டும்போது கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டு அவர்கள் மீது அட்சதையும் போட்டனர். மேலும் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து பெண்ணும் , மாப்பிள்ளையும் கலைச்செல்வி வீட்டிற்கு புறப்பட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+