Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்பிஐ ஏடிஎம்மில் யாரிதை வைத்தது? மும்பையிலிருந்து வந்த போன்! விழுந்தடித்து ஓடிய கடலூர் வங்கி ஆபீசர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நாடு முழுவதும் அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்காக நகரம் முதல் கிராமங்கள் வரை ஏடிஎம் இயந்திரங்களை நிறுவி இருக்கின்றன.. இதனால் கோடானுக்கோடி மக்கள் ஏடிஎம்மை நேரடியாகவே பயன்படுத்தி பலன் பெற்று வருகிறார்கள்.. ஆனாலும், ஏடிஎம்களில் கொள்ளைகள் நடந்தவாறே உள்ளது.. தற்போதுகூட, கடலூர் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை பார்ப்போம்?

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏடிஎம் கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் நேரடியாகவே புகார்களை அளித்திருந்தனர்..

SBI ATM cuddalore mumbai

எனவேதான்., மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக 'சிப்' வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

ஏடிஎம்களில் சிப்

இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து படிப்படியாக இது நடைமுறைக்கும் வந்தது. மேலும், சிப் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி1-ந்தேதி முதல் செயல்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

எனினும், ஏடிஎம் கொள்ளை என்பது தொடர்கதையாகிவருகிறது.. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏடிஎம்மை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகளையும் ஏற்படுத்தியிருந்தாலும்கூட, சில ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் இல்லை என்ற புகாரும் அவ்வப்போது வருகிறது..

ஏடிஎம்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும்கூட, அந்த கேமராவையே மறைத்து அல்லது கேமராவையும் சேர்த்து திருடி, ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கிறார்கள்..

வாசன் வலியுறுத்தல்

எனவேதான், ஏடிஎம்மில் கொள்ளையடித்தால் அது நடக்காது என்று எண்ணுகிற அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை பொதுமக்களும் வங்கி வாடிக்கையாளர்களும் அறிந்துகொள்ளும் வகையில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஒருமுறை மூத்த தலைவர் ஜிகே வாசனும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதுமட்டுமல்ல, ஏடிஎம் கொள்ளையில் பிடிப்பட்டவர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இத்திருட்டில் ஈடுபட இருப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் வங்கிகள் காவல்துறையை மட்டுமே நம்பி இருக்காமல் வங்கிகளும் முறையான காவல் பணியை பலப்படுத்தியும், தொழில்நுட்ப வசதியை அதிகப்படுத்தியும் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமாகா தலைவர் வாசன் கேட்டுக் கொண்டிருந்ததை தற்போது இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

மும்பையிலிருந்து அலர்ட்

இதோ கடலூரில் ஒரு திருட்டு முயற்சி நடந்துள்ளது.. கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.. இந்த ஏடிஎம் மிஷினில் சிப்பை வைத்திருப்பதாக கடலூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு, மும்பையிலிருந்து, உயர் அதிகாரிகள் உடனடியாக அலர்ட் தந்திருக்கிறார்கள்..

இதைக்கேட்டு பதறிப்போன வங்கி ஊழியர்கள் ஏடிஎம் மிஷினில் இருந்த சிப்பை அகற்றினார்கள்.. பிறகு உடனடியாக போலீசுக்கும் தகவல் அளித்ததன் அடிப்படையில், போலீசாரும் சம்பந்தப்பட்ட ஏடிஎம்முக்கு வந்தனர்.. அங்கிருந்த சிசிடிவியையும் ஆய்வு செய்தனர்.

கடலூரில் ரூம் போட்டு

அதில், 2 வடமாநில நபர்கள் ஏடிஎம்முக்குள் நுழைந்துள்ளது பதிவாகியிருக்கிறது.. அவர்கள் மீது சந்தேகம் திரும்பியிருப்பதால், அந்த 2 பேரை பிடித்து தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் 2 பேரும் , ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பதற்காகவே, கடலூரில் ரூம் எடுத்து தங்கியிருந்ததும், விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது..

இந்த கொள்ளை முயற்சியில் இன்னொருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.. அவருக்கும் தேடுதல் வலை வீசப்பட்டுள்ளது..

இந்த கொள்ளை முயற்சி குறித்து, மும்பையிலுள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் முன்கூட்டியே அலர்ட் செய்யப்பட்டதால், ஏடிஎம்மிலிருந்த பணம் தப்பியிருக்கிறது. எனினும், இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை தந்து கொண்டு இருக்கிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+