'ஞாயிறு மதியம் சமையல் உனது, விரும்பி நீ சமைத்துடுவாய்'.. உள்ளே வந்த நாகராணி.. அலறிய இளைஞர்
கடலூரில் சிலிண்டருக்கு அடியில் சீறிய நல்ல பாம்பு லாவகமாக பிடித்து காட்டில் விடப்பட்டது.
கடலூர்: சிலிண்டருக்கு அடியில் நல்ல பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டரை தூக்கி வைக்கும் போது அடியில் இது போல் ஏதேனும் பாம்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் என்று அதிர்ச்சியுடன் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சிலிண்டருக்கு அடியில் பாம்பு இருந்த சம்பவம் கடலூரில் உள்ள வெளிச்செம்மண்டலத்தில் நடந்திருக்கிறது. மதியழகம் என்பவர் வீட்டில் தான் சிலிண்டருக்கு அடியில் பாம்பு சுரண்டு படுத்து கிடந்த சம்பவம் நடந்திருக்கிறது. சரி என்ன நடந்தது எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்
கடலூர் வெளிச்சமண்டலத்தைச் சேர்ந்த மதியழகம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது சமையறையில் உள்ள சிலிண்டர் இருக்கும் பகுதியில் ஏதோ உஸ் உஸ் என சத்தம் வருவதை கவனித்தார். அவருக்கு ஏதோ ஒன்று உள்ளே இருக்கிறது என்பது தெரிகிறது.

நல்ல பாம்பு
நேராக சிலிண்டரை ஆட்டி என்ன சத்தம் வருகிறது என்பதை பார்த்திருக்கிறார். அப்போது சிலிண்டருக்கு அடியில் உள்ள சிறிய துவாரம் வழியாக நல்ல பாம்பு எட்டி பார்த்து படமெடுத்து ஆடியிருக்கிறது. இதை கண்டு நடுங்கிப்போன மதியழகன் உடனடியாக கடலூரில் உள்ள பாம்பு ஆர்வலர் செல்வாவிற்கு தகவல் கொடுத்தார்.

அலறிய உறவினர்கள்
அங்கு செல்வா சென்று பார்த்த போது பாம்பு இருக்கிற இடமே தெரியாத அளவிற்கு சிலிண்டருக்கு அடியில் சுருண்டு படுத்திருந்தது. சிலிண்டரை வெளியிடுத்து கவுத்து பார்த்தார் . பின்னர் சிலிண்டரின் கீழ் பகுதியில் மெதுவாக வெளியே எட்டி பார்த்தது நல்ல பாம்பு. அதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அலறிஅடித்த படி தள்ளி போனார்கள்.

கிண்டல் பதிவு
இதையடுத்து நல்ல பாம்பை லாவகமாக பிடித்த செல்லா அதனை ஆசுவாசப்படுத்தி பாட்டிலில் அடைத்தார். அதன்பின்னர் காப்பு காட்டில் சென்று பாம்பை விட்டுவிட்டார். சிலிண்டருக்கு கீழே இருந்து நல்ல பாம்பு வெளியில் படம் எடுத்து ஆடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த சிலர், வீட்டில் கமகமன்னு வாசனை வந்திருக்கும். உடனே என்ன சமைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க பாம்பு வந்திருக்கும் என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

அடிக்காதீர்கள்
சிலிண்டருக்கு அடியில் என்றில்லை, ஷூவிற்குள்ளும் பாம்பு இருக்கும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். எனவே எந்த ஒரு பொருளையும் எச்சரிக்கையாக கையாள்வது ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். பாம்பு நீண்ட நாட்களாக பயன்படுத்தாத கற்குவியல்கள், ஷூக்கள், சிலிண்டர்கள், ஏன் கழிவறைகளில் கூட பதுங்கி இருக்கும் என்கிறார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும். அதே போல் பாம்பு உள்ளிட்ட விலங்குகளை கண்டால் அடித்துக் காலி செய்யாமல் தீயணைப்பு துறைக்கோ அல்லது பாம்பு பிடி ஆர்வலர்களுக்கோ தகவல் தெரிவிப்பது நல்லது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications