“அண்ணா விட்ருங்கண்ணா..” கஞ்சா விற்கச் சொல்லி மாணவர்களை தாக்கிய வீடியோ.. கடலூர் எஸ்.பி விளக்கம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாணவர்களை கஞ்சா விற்கும் சிலர் தாக்கியதாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாகப் பரவிய நிலையில், அதுதொடர்பாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.
சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரிகள் ஐடிஐ மாணவர்களை தாக்கிய வீடியோ வெளியான விவகாரத்தில் ஐடிஐ மாணவர்களை தாக்கியவர், வீடியோ எடுத்தவர் ஆகிய இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள ஐடிஐ ஒன்றில் படிக்கும் மாணவர்கள் இருவரை கஞ்சா வியாபாரிகள் ஒரு அறையில் வைத்து தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்திய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் ஐடிஐ மாணவர்களை அறையில் வைத்து தாக்கியது தொடர்பாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இந்த வீடியோ 5 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த வீடியோவில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ்குமார், போண்டா என்கிற நவீன்ராஜ் ஆகிய இரண்டு நபர்களில் ஒருவர் அடிக்கிறார். ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இது சம்பந்தமாக அப்போதே தெரியவந்தது.
20.11.2024 அன்று விக்கி, நவீன்ராஜ் உள்ளிட்ட 3 முக்கிய குற்றவாளிகள் உட்பட 16 குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில்14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் கிடைத்த தகவல்களை வைத்து அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தொடர் விசாரணை மேற்கொண்டு, ஆந்திர மாநிலம் நெல்லுரை சேர்ந்த உதயபாஸ்கர் என்பவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 26.11.2024 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த இருவர் உட்பட 15 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் முக்கிய குற்றவாளியான ஒடப்பு சிவாவை கடந்த பிப்ரவரி மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறோம். இந்த வீடியோவில் இருக்கும் வீடியோ எடுத்தவர் அடித்தவர் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் கடலூர் மாவட்டத்தில் 35 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அப்போது யாரும் இதுகுறித்து புகார் தரவில்லை. அதனால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications