11-99 - ரகசிய குறியீட்டு எண்.. கடலூர் கேட் கீப்பரின் அந்த ஒரு தவறு.. தலைகீழாக மாறிய நிலைமை
கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று முன்தினம் காலை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பர் என்ன தவறு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில்கள் கடந்து செல்லும் கேட்களில் இன்டர் லாக் முறை இருக்கும். செம்மங்குப்பம் பகுதியில் நான் இன்டர் லாக் முறை தான் இருக்கிறது. இங்கு கேட்டில் 11-99 க்குள் ரகசிய குறியீட்டு வழங்குவார்கள். அதை பதிவு செய்யும் கேட் கீப்பருக்கு, கேட்டை மூடிவிட்டு ரகசிய குறியீட்டு எண் வழங்குவார்..ஆனால் நடந்தது என்ன தெரியுமா? இப்போது பார்ப்போம்.
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் கடந்த இரண்டு நாள் முன்பு காலையில் பள்ளி செல்ல வேண்டிய தனியார் வேன் ஒன்று ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது.இதில் 3 மாணவர்கள் பலியானார்கள். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விபத்திற்கு கேட் கீப்பர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தின் பின்னணி குறித்து பார்ப்போம்.

செம்மங்குப்பம் ரயில்வே கேட்
கடலூர் முதுநகர் அடுத்த கேப்பர்குவாரி ரயில் நிலையத்திற்கும், ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே சிக்னல் இல்லாத (நான் இன்டர் லாக்) கேட் கீப்பர் மட்டும் பணியில் இருக்கும் செம்மங்குப்பம் ரயில்வே கேட் இருக்கிறது. இந்த ரயில்வே தண்டவாளத்தை தனியார் பள்ளி வேன் கடந்த போது தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
நான் இன்டர் லாக்
நான் இன்டர் லாக் உள்ள செம்மங்குப்பம் போல் உள்ள ரயில்வே கேட்களில் சில நடைமுறைகள் உள்ளன அதன்படி 'நான் இன்டர் லாக்' ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலைய அதிகாரி 11-99 எண்களில் ஏதாவது 2 இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை கேட் கீப்பருக்கு வழங்குவது வழக்கம். அந்த எண்ணை கேட் கீப்பர் தனது (பி.என்.) பதிவேடு புத்தகத்தில் குறித்துக்கொள்வார். பின்னர் பிறகு கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடிவிட்டு, அவர் 2 இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை வழங்குவார். அதை ரயில் நிலைய அதிகாரி தனது பி.என். புத்தகத்தில் குறித்துக்கொள்வார். இந்த நடைமுறை முடிந்ததும் ரயில்கள் கேட்டை எவ்வித பிரச்சனையும் இன்றி கடந்து செல்லும்.
ரகசிய குறியீடு எண்
அதேநேரம் 2-வதாக, ரகசிய குறியீட்டு எண்ணை ரயில்வே கேட் கீப்பர் வாங்கவில்லை என்றால், ரயில் நிலைய அதிகாரி ரயில் டிரைவரிடம் தகவல் தெரிவித்து, அந்த கேட்டை கடக்கும்போது மெதுவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல அறிவுறுத்துவது வழக்கம் (கேட் கீப்பருக்கு ஏதேனும் நடந்திருந்தால் அல்லது அவர் அங்கு இல்லாத சூழல் ஏற்பட்டால்).
சைகை மூலம் தெரிவிக்கவில்லை
அதேபோல் கேட் கீப்பர் ரயில் வந்ததும் கேட் கீப்பர் சைகை மூலமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றால், உடனடியாக டிரைவர் ரயிலை நிறுத்தி, இறங்கி வந்து தண்டவாளத்தை இருபுறமும் பார்த்து விட்டு மீண்டும் ரயிலை இயக்கி செல்ல வேண்டும். அதேநேரம் மூன்றாவது விஷயம் இருக்கிறது. இந்த தவறு தான் செம்மங்குப்பத்தில் நடந்துள்ளளது. ரயில் நிலைய அதிகாரியிடம் ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கிக்கொண்டு, மறுபடியும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்துவிட்டு கேட்டை மூடாமல் இருந்தால், முழுக்க, முழுக்க ரயில்வே கேட் கீப்பரின் தவறு ஆகும். இதுதான் செம்மங்குப்பத்தில் நடந்துள்ளதாம்-
கேட் கீப்பரின் தவறு
ஏனெனில் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் கேட் கீப்பர் கடலூர் துறைமுகம் ரயில் நிலைய அதிகாரியிடம் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று இருக்கிறார். பிறகு அவரும் 2 இலக்க குறியீட்டு எண்ணை ரயில் நிலைய அதிகாரியிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் ரயில்வே கேட்டை மூடிவிட்டு தான் அந்த ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை.. ரயில்வே கேட்டை மூடாமலேயே ரகசிய குறியீட்டு எண்ணை கூறியிருக்கிறார். இதுதான் விபத்துக்கு காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications