கடலூரில் கணவனுக்கு கறிவிருந்து வைத்த மனைவி.. மறு நிமிடமே மறக்க முடியாத சம்பவம்.. அசால்ட் அண்ணாதுரை
கடலூர்: நம்முடைய நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பலாத்கார சம்பவங்கள் பெருகி வருகின்றன.. அதேபோல, கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் நீண்டு கொண்டே செல்கிறது.. குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால், விவாகரத்துகளும் பெருகிவிட்டதாக நீதிமன்றங்களும் கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை.. 55 வயதாகிறது.. இவர் ஒரு தச்சு தொழிலாளி... இவரது மனைவி பெயர் அமுதா.. 50 வயதாகிறது. இந்த தம்பதிக்கு ராஜதுரை(30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது..

ஆனால், அண்ணாதுரை-அமுதா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதிகரித்ததால், ஒருகட்டத்தில் இருவருமே பிரிந்துவிட்டனர்.. எனவே, மகன் ராஜதுரையுடன் குள்ளஞ்சாவடி பகுதியில் அமுதா வசித்து வருகிறார்.. அதேபோல அண்ணாதுரை நெல்லிக்கொல்லையில் தன்னுடைய வயதான பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அண்ணாதுரை - அமுதா
இந்நிலையில், மகனுக்கு 30 வயதாகிவிட்டதால், அவருக்கு பெண் தேடி, ஒரு இடத்தில் திருமணம் பேசி முடித்தார் அமுதா.. 2 நாட்களுக்கு முன்பு மகனின் திருமணத்தையும் சிறப்பாக நடத்தினார்..
பின்னர், குறிஞ்சிப்பாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் மணமக்களுக்கு கறிவிருந்து ஏற்பாடு செய்தார் அமுதா.. இந்த நிகழ்வில் கணவர் அண்ணாதுரையும், அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்..
விருந்து முடிந்ததுமே, தன்னுடைய மாமியாரை நெல்லிகொல்லையில் உள்ள அவரது வீட்டில், ஆட்டோவில் கொண்டு போய் விட்டுவிட்டுவிட்டார்.. ஆனால், திடீரென தன்னுடைய அமுதா கொலை செய்யப்பட்டார்..
விருந்து - திருமணம்
வீட்டின் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் அமுதா கொலை செய்யப்பட்டு விழுந்து கிடந்த சம்பவம், காட்டுத்தீ போல பரவியது.. இதுகுறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் அமுதாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு அமுதாவை யார் கொலை செய்தது? என்ற விசாரணையை கையில் எடுத்தனர்...
கணவருக்கு கறிவிருந்து
அப்போதுதான், கணவர் அண்ணாதுரை, வீட்டில் இல்லாதது தெரியவந்தது..இதையடுத்து, அவரை தேட முயன்றபோது, வளையமாதேவி டாஸ்மாக் கடை அருகே ஒளிந்து கொண்டிருந்த அண்ணாதுரையை அதிரடியாக கைது செய்தனர். பிறகு போலீசாரிடம் அண்ணாதுரை வாக்குமூலமாக சொல்லும்போபோது பல்வேறு பகீர் தகவல்களையும் கூறினார்
அதாவது, அமுதா ஏற்பாட்டின்பேரில்தான் அண்ணாதுரையின் மகனுக்கு திருமணம் நடந்துள்ளது.. 2 நாட்களுக்கு முன்பு கறி விருந்தும் நடந்துள்ளது.. இந்த கறிவிருந்தில் அண்ணாதுரையை, அவரது மனைவி மதிக்கவேயில்லையாம். இதுதான் அண்ணாதுரைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்டோவில் மாமியார்
இந்த நேரத்தில்தான், தன்னுடைய மாமியாரின் வீட்டிற்கு, அமுதா ஆட்டோ வைத்து அழைத்து சென்றுள்ளார்.. அப்போது வந்த அண்ணாதுரை, தன்னை ஏன் கறிவிருந்தில் மதிக்கவேயில்லை ? என்று தகராறு செய்துள்ளார்..
இதுவே காரசார விவாதமாகி ஆவேசமடைந்த அண்ணாதுரை, ஆசாரிகள் பயன்படுத்தும் கூர்மையான உளி போன்ற ஆயுதத்தை வைத்து, அமுதாவின் கால், முகத்தில் சரமாரியாக குத்தினார்.. இதனால் வலியால் துடிதுடித்த அமுதா, அலறி துடித்தார்.. உடனே அண்ணாதுரை பயந்துகொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது அம்பலமானது..
இப்போது போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, உளி போன்ற ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர். இப்போது அண்ணாதுரை கடலூர் ஜெயிலில் உள்ளார். .
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications