Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் கணவனுக்கு ஜூஸ் தந்த மனைவி.. முதலிரவில் சீக்ரெட் கேட்டு.. இப்ப அரசு மருத்துவமனையில் அட்மிட்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்காமல், கடந்த 2 நாட்களாகவே பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தில் இதுவரை யாருமே கைது செய்யப்படவில்லையாம். எனவே, காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு தந்தபடியே இருக்கிறார்களாம். என்ன நடந்தது?

கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் சூர்யா.. இவருக்கு 27 வயதாகிறது.. கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சூர்யா புகார் மனு ஒன்றை தந்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

Cuddalore Government Hospital Juice

முதலிரவில் அதிர்ச்சி தகவல்

"எனது அண்ணன் கலையரசனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் விஷம் குடித்துவிட்டார்.

அப்போது நாங்கள் இதுகுறித்து பெண் வீட்டாரிடம் கேட்டபோது, குடும்ப பிரச்சனையால் விஷம் குடித்ததாக கூறினர். இதையடுத்து திருமணம் முடிந்து, அன்றிரவு எனது அண்ணனிடம் அந்த பெண், வேறு ஒருவரை தான் விரும்புவதாக கூறியுள்ளார். இதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி எனது அண்ணனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது பெண் வீட்டார், எனது அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்து, எனது அண்ணனின் மனைவியை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

விஷ ஜூஸ் தந்த மனைவி

இந்நிலையில் எனது அண்ணன் பிப்ரவரி 20ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது எனது அண்ணனின் மனைவி அவருக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார். இதை குடித்த என் அண்ணன், சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வந்த புதுச்சத்திரம் போலீசார், எனது அண்ணனிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். இதே போல சிதம்பரம் நீதிமன்றத்தில் இருந்து வந்த நீதிபதியும் வாக்குமூலம் வாங்கியுள்ளார். ஆனால் இதுநாள் வரை எனது அண்ணனின் மனைவியையும், அவருடன் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்யவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த புகாரானது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அதாவது, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கலையரசனிடம், புதுமணப்பெண் முதலிரவில் சொன்னாராம்.

வீடியோ காலில் மனைவி பேச்சு

அதுமட்டுமல்லாமல், அடிக்கடி இரவில் யாரிடமோ வீடியோ காலில் மனைவி பேசி வருவதை பார்த்து அதிர்ந்து போன கலையரசன், பெண்ணின் வீட்டில் முறையிட்டதாக தெரிகிறது. அதற்கு பெண் வீட்டில், "தாலி கட்டிவிட்டதால், இனி ஒன்றாக வாழ்ந்தாக வேண்டும்" என்று சொன்னார்களாம்.. பெண்ணுக்கு தன்னுடன் வாழ விருப்பமில்லையே என்று கலையரசன் சொல்லியும், அவர்கள் எதையுமே காதில் போட்டு கொள்ளவில்லையாம்..

அதனால்தான், கலையரசனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்க முயன்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண் கலையரசனுக்கு கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாகவும் பகீர் குற்றச்சாட்டை கலையரசன் தரப்பில் முன்வைக்கிறார்கள்.

போலீசாரிடம் வேண்டுகோள்

இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் கலையரசன்.. இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தன்னுடைய மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது.

திருமணமாகி 25 நாட்களுக்குள், கணவனுக்கு கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்ததாக மனைவி மீது கணவர் புகாரளித்துள்ள சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+